புதன்கிழமை, ஜனவரி 15, 2025

விஜய் டிவி சீரியலை ஓவர் டேக் பண்ணும் ஜீ தமிழ் 5 சீரியல்கள்.. தங்கையின் ஆசையை நிறைவேற்றிய சண்முகம்

Serial: வீட்டு வேலையை முடித்துவிட்டு ரொம்ப அலுப்பாக இருக்கும் குடும்பப் பெண்மணிகளுக்கு ரொம்பவே ஆறுதலாக இருப்பது சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் தான். அதனால் எந்த சீரியல்கள் நன்றாக இருக்கிறது அதற்கு முக்கியத்துவம் கொடுத்து பார்க்க ஆரம்பித்து விடுவார்கள். அப்படித்தான் சன் டிவி, விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் உள்ள சீரியல்கள் அனைத்தும் மக்களிடம் வரவேற்பை பெற்றிருக்கிறது.

ஆனால் தற்போது விஜய் டிவி சீரியலை விட ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் சூப்பராக இருக்கிறது என்று சொல்லும் அளவிற்கு மக்களிடம் பெயர் வாங்கி விட்டது. அந்த வகையில் டிஆர்பி ரேட்டிங்கில் முதல் ஐந்து இடத்தை பிடித்த சீரியல்களை பற்றி தற்போது பார்க்கலாம்.

சண்முகத்தின் அம்மாவை குறி வைத்த சௌந்தர பாண்டியன்

கார்த்திகை தீபம்: கார்த்திக் மற்றும் தீபாவின் கல்யாணம் நினைத்தபடி நன்றாக முடிந்தாலும் சில சதியால் மாட்டிக்கொண்ட தீபா, மலையிலிருந்து கீழே விழுந்து விட்டார். இதனால் மருமகளை நினைத்து கார்த்திக் அம்மா கொஞ்சம் கொஞ்சமாக சுயநினைவை இழந்து கொண்டு வருகிறார்.

இவர் உயிரை காப்பாற்ற வேண்டும் என்றால் தீபாவை கூட்டிட்டு வந்தால் தான் சரியாக முடியும் என்று டாக்டர் சொல்லிவிட்டார். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் தீபாவை தேடி அலையும் கார்த்திக்கு தீபா மறு உருவமாக ஸ்டைலிஷ் ஆக வந்து நிற்கிறார். அந்த வகையில் இவரால் மிகப்பெரிய டர்னிங் பாயிண்டாக நாடகம் இன்னும் அதிகளவில் சூடு பிடிக்க போகிறது.

அண்ணா: ரத்னா ஆசைப்பட்ட மாதிரி காதலனை கைபிடிக்கும் தருணம் நெருங்கி விட்டது. பல போராட்டங்களுக்கு நடுவில் சண்முகம், தங்கையின் கல்யாணத்தை தடபுடலாக ஏற்பாடு செய்து வருகிறார். ஆனால் இந்த கல்யாணத்தை தடுக்கும் விதமாக சவுந்தர பாண்டியன் பல சதிகளை செய்து வருகிறார். இதில் சண்முகத்தின் அம்மா பலிக்காடாக சிக்க போகிறார். இருந்தாலும் எல்லாத்தையும் தாண்டி தங்கையின் ஆசையை நிறைவேற்றும் விதமாக ரத்னாவின் கல்யாணத்தை நல்லபடியாக நடத்தி முடித்து விட்டார்.

வீரா: தனக்கேற்ற மனைவியாகவும் அம்மாவிற்கு அடுத்தபடியாக தன்மீது பாசத்தையும் அக்கறையும் காட்டும் வீராவை எந்த காரணத்தைக் கொண்டும் விட்டுவிட மாட்டேன் என்று அதிரடியாக மாறன், வீரா கழுத்தில் தாலி கட்டிவிட்டார். ஆனால் இதை ஏற்றுக் கொள்ளாத வீரா, மாறனை விட்டு ஒதுங்கும் விதமாக அம்மா வீட்டில் இருக்கிறார். நீ என்னதான் ஒதுக்கினாலும் நான் உன்னோடு தான் வாழ்வேன் என்று பிடிவாதமாக மாறன், வீரா வீட்டு வாசலிலேயே குடிபுகுந்து விட்டார்.

சந்தியா ராகம்: ரகுராம் என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்பது தெரியாமல் மொத்த குடும்பமும் குழப்பத்தில் இருந்தது. ஆனால் எப்பொழுதுமே ரகுராம் எடுத்த முடிவு சரியாக தான் இருக்கும் என்று சொல்வதற்கு ஏற்ப மாயா மற்றும் சீனுவின் காதலுக்கு கிரீன் சிக்னல் கொடுத்து விட்டார். இதனால் மாயாவின் அம்மா ஆசைப்பட்டபடி ரகுராம் குடும்பத்தில் இருப்பவர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்து விட்டார்.

நினைத்தேன் வந்தாய்: மனோகரிடமிருந்து குழந்தைகளையும் எழிலையும் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக சுடர் யாருக்கும் தெரியாமல் மணமேடையில் உட்கார்ந்து எழில் கையால் தாலி கட்டப் போகிறார். ஆனால் சுடர் கேரக்டரை மாற்றியது பார்ப்பவர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றமாக அமைந்து விட்டது. அதனால் கொஞ்சம் டிஆர்பி ரேட்டிங்கில் அடி வாங்கி இருக்கிறது. இதனை தொடர்ந்து நெஞ்சத்தைக் கிள்ளாதே சீரியல் மக்களின் ஃபேவரிட் நாடகமாக இடம் பிடித்து வருகிறது.

Trending News