சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

விஜய் டிவி சீரியலுக்கு சைலண்டாக ஆப்பு வைக்கும் ஜீ தமிழ்.. சன் டிவி கிட்ட நெருங்கும் 5 சீரியல்கள்

Vijay tv and Zee tamil Serial: என்னதான் புது புது படங்கள் வாரம் ஒருமுறை வந்தாலும் தினமும் வீட்டில் இருந்தபடியே பார்த்து ரசிக்கும் சீரியலுக்கு எப்போதுமே மக்கள் மத்தியில் மவுசு அதிகம் தான். அதனால் சின்னத்திரை மூலமாக மக்களை கவரும் வகையில் சன் டிவி, விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் போன்ற சேனல்கள் போட்டி போட்டுக் கொண்டு சீரியல்களை ஒளிபரப்பு செய்கிறார்கள். அந்த வகையில் எப்பொழுதுமே முதலிடத்தில் சன் டிவி தான் இடம் பிடித்திருக்கிறது.

இதற்கு அடுத்த இடத்தை பிடிப்பதற்கு விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் போராடி வருகிறது. அதன்படி விஜய் டிவி இரண்டாவது இடமும் ஜீ தமிழ் மூன்றாவது இடத்தையும் தக்க வைத்திருக்கிறது. ஆனால் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக விஜய் டிவி சீரியலை பின்னுக்கு தள்ளி சன் டிவி சீரியல் கிட்ட நெருங்கும் அளவிற்கு ஜீ தமிழ் சீரியல்கள் மக்களை கவர்ந்து வருகிறது.

இரண்டாவது இடத்தைப் பிடிக்க போராடும் ஜீ தமிழ்

அதில் முக்கியமானது கார்த்திகை தீபம். கார்த்திக் மற்றும் தீபா ஒருவரை ஒருவர் காதலிக்க ஆரம்பித்து முறைப்படி கல்யாணம் பண்ணி சந்தோஷமாக வாழலாம் என்று குடும்பத்தில் இருப்பவர்கள் முன்னாடி திருமணம் செய்து கொண்டார்கள். ஆனால் அதையும் கெடுக்கும் விதமாக சூழ்ச்சி வலையில் சிக்கிய தீபா, மலையில் இருந்து கீழே விழுந்து தற்போது இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறார். உண்மையான தீபாவை கண்டுபிடிக்கும் விதமாக கார்த்திக் முயற்சி செய்து வருகிறார். இதுதான் ஜீ தமிழில் முதல் இடத்தில் இருக்கிறது.

எப்பொழுதுமே குடும்பங்கள் பார்க்கும் சீரியல்களில் அண்ணன் தங்கச்சி மற்றும் குடும்ப செண்டிமெண்ட் வைத்தால் மக்களிடம் அமோக வரவேற்பை பெறும். அந்த வகையில் அண்ணா சீரியல் மக்களின் பேவரைட் சீரியலாக இடம் பிடித்திருக்கிறது. சண்முகத்தின் அம்மா சூடாமணி இறந்த பிறகு சென்டிமென்ட் காட்சியை வைத்து ஒட்டுமொத்த குடும்பமும் தற்போது தத்தளித்து வருகிறது. இதிலிருந்து மீண்டு தங்கைகளை கரை சேர்க்கும் விதமாக சண்முகம் போராடி வருகிறார்.

பிடிக்காத திருமணமாக இருந்தாலும் கழுத்தில் தாலி கட்டி விட்டால் அதை கழட்டி போட முடியாமல் யோசிக்கும் மன நிலைமையில் வீரா குழப்பத்தில் இருந்தார். இந்த சமயத்தில் மாறனின் அத்தைக்கு கிடைத்த ஆதாரத்தை வீரா பார்த்தபொழுது மாறன் குடும்பத்தை கண்மணி இடமிருந்து காப்பாற்றி கண்மணிக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்பதற்காக வீரா, மாறனுடன் புகுந்து வீட்டில் வாழப்போகிறார். அந்த வகையில் கண்மணி மற்றும் வீரா எதிரும் புதிருமாக போட்டி போட போகிறார்கள்.

இதனைத் தொடர்ந்து சந்தியா ராகம் சீரியலில் சீனுவுக்கு மாயா உடன் நிச்சயதார்த்தம் ஆன நிலையிலும் சாரு மற்றும் பத்மாவின் கூட்டணி தொடர்ந்து சதி வேலை செய்து வருகிறது. அந்த வகையில் சாருக்கு மாப்பிள்ளை குடும்பத்தார் மூலம் பிரச்சனை செய்து ரகுராம் மனதில் குழப்பத்தை ஏற்படுத்தலாம் என்று பத்மா திட்டம் திட்டுகிறார். இதையெல்லாம் முறியடிக்கும் விதமாக சீனுவின் அப்பா உள்ளே புகுந்து ஆட்டத்தை குழப்பி விட்டார்.

அப்பாவின் பாசத்திற்காக ஏங்கிக் கொண்டிருக்கும் வள்ளியின் அன்பே புரிந்து கொள்ளாமல் அப்பா உதாசீனப்படுத்துகிறார். இந்த சூழலில் வள்ளியை ஒரு நொடி கூட கண்ணிமைக்காமல் பாதுகாவலராக பார்த்துக் கொண்டிருக்கும் வேலன் எப்படி வள்ளியின் வாழ்க்கைக்குள் நுழைகிறார். அப்பாவின் மனசை மாற்றி வள்ளி எப்படி ராணியாக அந்த குடும்பத்தில் வாழ போகிறார் என்பதை நோக்கி வள்ளியின் வேலன் கதை நகர்ந்து கொண்டு வருகிறது.

Trending News