செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

விஜய் சேதுபதிக்கு எதிராக களமிறக்கப்படும் ஹீரோ.. பிக்பாஸுக்கு போட்டியாக ஜீ தமிழ் ஆரம்பிக்கும் புதிய நிகழ்ச்சி

Bigg Boss: விஜய் டிவியின் டி ஆர் பி யை உடைப்பதற்கு சன் டிவியும், ஜீ தமிழ் சேனலும் போட்டி போட்டு நிகழ்ச்சிகளை களம் இறக்கி வருகிறார்கள். ஏற்கனவே குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மொத்த பிராண்டையும் தூள் தூளாக்கிவிட்டது சன் டிவி.

டாப் குக் டூப் குக் நிகழ்ச்சி பெரிய அளவில் வரவேற்பை பெறாவிட்டாலும், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கடைசியாக மணிமேகலை செய்த குளறுபடி அளவுக்கு இல்லாமல் சுமுகமாக நடந்து விட்டது. அடுத்து விஜய் டிவி மலை அளவுக்கு நம்பி இருப்பது பிக் பாஸ் நிகழ்ச்சியை தான்.

இந்த சீசனும் விஜய் டிவிக்கு மதில் மேல் பூனை தான். ஏழு சீசனாக பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த கமலஹாசன் தற்போது இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகி இருக்கிறார். அவருக்கு பதிலாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி எட்டாவது சீசனின் தொகுப்பாளராக களம் இறங்குகிறார்.

ஜீ தமிழ் ஆரம்பிக்கும் புதிய நிகழ்ச்சி

மக்கள் செல்வனை ஒரு நடிகராக பிடிக்கும் என்றாலும், பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது மக்களுக்கு நிறைவை கொடுக்குமா என்பது இனிதான் தெரியும். அதற்குள் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வேட்டு வைக்க ஜீ தமிழ் புதிய நிகழ்ச்சி ஒன்றை களம் இறக்கி இருக்கிறது.

மகா நடிகை என்ற பெயரில் தொடங்கவிருக்கும் இந்த நிகழ்ச்சியை நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி தொகுத்து வழங்க இருக்கிறார். உன் எண்ணம் எவ்வளவு தூரமோ ,உன் வாழ்க்கையும் அவ்வளவு தூரம் என்ற அழகான வரிகளோடு விஜய் ஆண்டனி அந்த ப்ரோமோவை தொடங்கி வைத்திருக்கிறார்.

நிகழ்ச்சியின் ப்ரோமோவை பார்க்கும் பொழுது ஏற்கனவே விஜய் டிவியில் ஒளிபரப்பான கதாநாயகி நிகழ்ச்சியின் கான்செப்ட்டை போல் என தெரிகிறது . இந்த நிகழ்ச்சி மக்களிடையே எடுபடுமா , முதன் முதலாக சின்ன திரையில் களமிறங்கும் விஜய் சேதுபதி மற்றும் விஜய் ஆண்டனி இருவருக்குள்ளும் யார் தங்களுடைய இலக்கை அடைகிறார்கள் என பொறுத்திருந்து பார்க்கலாம்.

Trending News