சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

ஹாரிஸ் ஜெயராஜ் தலைமையில் நடந்து முடிந்த ஜீ தமிழ் சரிகமப 4 ஃபைனல்.. டைட்டிலை தட்டி தூக்கியவருக்கு எத்தனை லட்சம் தெரியுமா.?

Zee Tamil: சின்னத்திரை சேனல் களில் பல ரியாலிட்டி ஷோக்கள் நடைபெற்று வருகின்றன. அதில் இளம் பாடகர்களின் திறமையை வெளிக்கொண்டுவரும் சரிகமப நிகழ்ச்சி ஜீ தமிழில் வெற்றிகரமாக நான்கு சீசன்களை கடந்துள்ளது.

saregama4
saregama4

அதில் தற்போது நான்காவது சீசனின் இறுதிப் போட்டி கோலாகலமாக நடந்து முடிந்திருக்கிறது. பல எதிர்பார்ப்புகளோடு நடைபெற்ற இறுதிப் போட்டியில் டைட்டில் வின்னர் யார்? அவருக்கு எவ்வளவு பரிசுத்தொகை கிடைத்தது என்பது பற்றி இங்கு காண்போம்.

saregama4
saregama4

அர்ச்சனா தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியில் 23 பாடகர்கள் ஆரம்பத்தில் கலந்து கொண்டனர். இதன் நடுவர்களாக ஸ்ரீனிவாஸ், விஜய் பிரகாஷ், கார்த்திக், சைந்தவி ஆகியோர் இருந்தனர்.

saregama4
saregama4

பாடகர்களை உற்சாகமூட்டுவதில் இருந்து அவர்களுடைய சிறு சிறு தவறுகளையும் திருத்தி நிகழ்ச்சியை இந்த அளவுக்கு கொண்டு வந்ததில் இவர்களின் பங்கு அதிகம். அதன்படி நேற்று நடைபெற்ற கிராண்ட் பைனல் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஹாரிஸ் ஜெயராஜ் கலந்து கொண்டார்.

saregama4
saregama4

சரிகமப 4 டைட்டிலை தட்டித் தூக்கிய மகிழன்

இதில் மொத்தம் ஆறு போட்டியாளர்கள் இறுதி நிலைக்கு வந்தனர். அவர்களுக்குள் நடந்த கடுமையான போட்டியில் மகிழன் டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

அவருக்கு 10 லட்ச ரூபாய் பரிசுத்தொகையாக கிடைத்துள்ளது. இவருக்கு அடுத்தபடியாக ஸ்வேதா முதல் ரன்னர் அப் ஆகியுள்ளார். விழுப்புரத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் வீரபாண்டி இரண்டாவது ரன்னர் ஆப் ஆகி இருக்கிறார்.

மேலும் மக்களின் சாய்ஸாக மரக்காணம் சரண் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர்களுக்கு பொதுமக்கள் மத்தியிலும் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியிலும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Trending News