புதன்கிழமை, ஜனவரி 15, 2025

ஜீ தமிழின் படுமொக்க சீரியலுக்கு வந்த முடிவு.. அப்பாடா என பெருமூச்சு விடும் கணவன்மார்கள்

சீரியல்கள் என்றாலே ஒரு சேனலில் ஒளிபரப்பாகும் அதே டெம்ப்ளேட்டை வைத்து வேறு ஒரு கதையை ரெடி பண்ணி மற்ற சேனல்களில் வேறு வேறு பெயரில் ஒளிபரப்புவது தொடர் கதையாகி வருகிறது.

சன் டிவியில் ஒரு சீரியல் நன்றாக போனால் அதேபோன்ற சீரியல்கள் வேறு வேறு பெயர்களில் ஜீ தமிழ் மற்றும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும். அதே போல் மற்ற சேனல்களில் சூப்பர் ஹிட் அடிக்கும் சீரியல்களை காப்பி செய்து சன் டிவியும் வேறு ஒரு பெயரில் தயாரித்த விடும்.

இப்படித்தான் காலம் காலமாக சென்று கொண்டிருக்கிறது. அப்படி சன் டிவியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற சீரியல் நந்தினி. படங்களுக்கு இணையாக கிராபிக்ஸ் காட்சிகளுடன் பட்டையை கிளப்பியது.

இதைப்பார்த்த ஜீ தமிழ் நிறுவனம் இதேபோன்று பிரமாண்ட பட்ஜெட்டில் விஜய்யின் நண்பர் சஞ்சீவ் என்பவரை வைத்து யாரடி நீ மோகினி என்ற சீரியலை தொடங்கியது. கொஞ்ச நாட்கள் நடித்த சஞ்சீவ் மீண்டும் தன்னுடைய தாய் இடமான சன் டிவிக்கே வந்துவிட்டார்.

அதன் பிறகு ஸ்ரீ கணேஷ் என்பவர் அந்த சீரியலில் நடித்து வந்தார். இந்த சீரியலை பார்ப்பதற்கு காரணமே அதில் இளம் வில்லியாக வரும் சைத்ரா ரெட்டி என்பவருக்காகத்தான். அவருக்கு அப்படி ஒரு ரசிகர் பட்டாளம் உருவாகி உள்ளது. முதலில் சுவாரசியமாகச் சென்ற இந்த சீரியல் சமீபகாலமாக ரசிகர்களின் பொறுமையை சோதித்தது.

yaaradi-nee-mohini-serial
yaaradi-nee-mohini-serial

இதனை நோட் செய்த ஜீதமிழ் நிறுவனம் விரைவில் யாரடி நீ மோகினி சீரியலுக்கு எண்டு கார்டு போடவுள்ளதாம். இதனால் ஒவ்வொரு குடும்பத்தில் இருக்கும் கணவன்மார்கள் பெருமூச்சு விடுகிறார்களாம்.

Trending News