புதன்கிழமை, ஜனவரி 15, 2025

ஜீ தமிழ் முக்கிய சீரியலில் இருந்து விலகிய நடிகர்.. ஒட்டுமொத்தமாக நாமத்தைப் போட்ட டிஆர்பி

ஜீ தமிழ் தொலைக்காட்சி இவ்வளவு நாளாக டாப்பில் இருந்த சீரியல் டிஆர்பியில் மிகப்பெரிய அடிவாங்கியுள்ளது ஜீ நிறுவனத்தை ஆட்டம் காண வைத்துள்ளது. இதிலிருந்து எப்படி மீள்வது என்றே தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கிறார்களாம்.

ஜீ தமிழ் தொலைக்காட்சி வெளியில் தெரிவதற்கு முக்கியமான காரணம் சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியை தான். அந்த நிகழ்ச்சிக்கு ஏகப்பட்ட நெகடிவ் விமர்சனங்கள் வந்ததால் அதை தூக்கியது ஜீ தமிழ்.

அதனைத் தொடர்ந்து ஜீ தமிழ் தொலைக்காட்சி இவ்வளவு நாட்களாக தாங்கி பிடித்தது செம்பருத்தி சீரியல் தான். அதிலும் ஆதி பார்வதி என்ற ஜோடியினருக்கு தாய்மார்கள் மத்தியில் அப்படி ஒரு வரவேற்பு கிடைத்தது.

சமீபத்தில் செம்பருத்தி சீரியலில் ஹீரோவாக நடித்த ஆதி என்கிற கார்த்திக் ஜீ தமிழ் குழுவினருடன் சின்ன கருத்து வேறுபாடு காரணமாக சீரியலை விட்டு ஒதுங்கினார். அதன் பிறகு யூ டியூப் சேனலில் தொகுப்பாளராக பணியாற்றிய அக்னி என்பவர் ஹீரோவாக அறிமுகப்படுத்தப்பட்டார்.

karthi-agni-sembaruthi-serial-heros
karthi-agni-sembaruthi-serial-heros

கார்த்தியை ஏற்றுக் கொண்ட மக்கள் இவரை சுத்தமாக ஏற்றுக்கொள்ளவில்லை. இதன் காரணமாக கொஞ்ச நாட்கள் வண்டியை தட்டுத்தடுமாறி ஓட்டிக்கொண்டிருந்த செம்பருத்தி சீரியல் தற்போது மொத்தமாக டிஆர்பியை இழந்துவிட்டதாம்.

இதிலிருந்து அந்த சீரியல் வெற்றி பெற்றதற்கு காரணம் கார்த்தி தான் என்பது தெரியவந்துள்ளது. கார்த்தி ஏற்கனவே விஜய் டிவியில் பல சூப்பர் ஹிட் நாடகங்களில் நடித்துள்ளார். இப்போது கார்த்திக்கு அதிக சம்பளம் கொடுத்தாவது மீண்டும் கூட்டி வந்து விட வேண்டும் என ஜீ தமிழ் குழுவினர் முடிவு செய்துள்ளார்களாம்.

Trending News