உணவை வீட்டிற்கே கொண்டு வந்து சேர்க்கும் நிறுவனங்களில் ஒன்று சொமேட்டோ. இந்நிறுவனம் இந்தியா முழுக்க பல மாநிலங்களிலும் உணவை டெலிவரி செய்து வருகிறது. தற்போது சொமேட்டோ ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளது. தமிழ் நாட்டை சேர்ந்த விகாஸ் என்ற இளைஞர் நேற்று சொமேட்டோவில் உணவு ஆர்டர் செய்திருந்தார்.
அதில் பாதி பொருட்கள் மட்டுமே டெலிவரி செய்யப்பட்டிருந்தது. இவ்வாறு தவறு நடக்கும் பட்சத்தில் நாம் நிறுவனத்திடம் முறையீடு செய்யலாம். அவர்கள் நமக்கு குறிப்பிட்ட தொகையை ரீபண்ட் செய்து விடுவார்கள். இதுபோல் சம்பந்தப்பட்ட விகாஸ் சொமேட்டோ நிறுவனத்தின் கஸ்டமர் கேர் நபரிடம் கூறியுள்ளார்.
அந்த நபர் விகாஷிர்க்கு ரீபண்ட் கொடுக்க மறுத்துள்ளார். மேலும் அவர்கள் உணவு நிறுவனம் மற்றும் டெலிவரி பாயிடம் பேசியதாகவும் ஆனால் அப்படி எந்த தகவலும் வரவில்லை என்று கூறியுள்ளனர். மேலும் நீங்கள் ஆங்கிலத்தில் பேசுவதால் எனக்கு தகுந்த பதில் அளிக்க முடியவில்லை என்று அதிகாரி கூறியுள்ளார்.
அதற்கு விகாஸ் நீங்கள் தமிழ்நாட்டில் சேவை புரியும் போது தமிழ் தெரிந்தவர்களை வேலைக்கு அமர்த்த வேண்டும் என்று கூறியுள்ளார். இதற்கு பதில் அளித்த அந்த நபர் ஹிந்தி நம் தேசிய மொழி என்றும், நீங்கள் இந்தியை கற்றுக் கொள்ளுங்கள் என்று காட்டமாக கூறியுள்ளார்.
இந்த செய்தியை விகாஷ் டுவிட்டரில் பகிர்ந்து சொமேட்டோ நிறுவனத்திடம் கேள்வி எழுப்பியுள்ளார். உங்கள் அதிகாரி என்னை ஹிந்தி கத்துக்க சொல்லி கூறுகிறார். இதுதான் கஸ்டமரிடம் நீங்கள் நடந்து கொள்ளும் விதமா என்று கேட்டுள்ளார். அந்த ஸ்க்ரீன் ஷாட் இணையம் முழுக்க தற்போது ட்ரெண்டாகி வருகிறது.
எங்கள் மொழியில் உங்களால் பேச முடியாது என்றால், எங்கள் மாநிலத்தில் நீங்கள் சேவையை தொடர வேண்டாம் என்று நெட்டிசன்கள் ட்விட் செய்து வருகின்றனர். மேலும் ‘ ரிஜெக்ட் சொமேட்டோ ‘ என்ற ஹாஷ் டாக்கை ட்ரெண்டாக்கி வருகின்றனர். இதனால் லட்சக்கணக்கான கஸ்டமர்களை இழந்துள்ளது சொமேட்டோ நிறுவனம். தற்பொழுது அந்த நிறுவனம் இதற்கு பதில் அளித்து உள்ளது. இதை நாங்கள் உடனே விசாரித்து தகுந்த நடவடிக்கை எடுக்கிறோம் என்று கூறியுள்ளனர்.