திங்கட்கிழமை, ஜனவரி 20, 2025

ஒரே படம், ஒரே பாட்டு.. மொத்த தமிழ் ரசிகர்களையும் வாரி போட்ட 90’ஸ் பேரழகி

உலக அழகி என்றால் நமக்கு உடனே நினைவுக்கு வருவது ஐஸ்வர்யா ராய் தான். ஆனால் இவருக்கு முன்னரே உலக அழகி பட்டம் பெற்ற ஒரு நடிகை உள்ளார். அதுமட்டுமின்றி அவர் தான் உலக அழகி பட்டம் பெற்ற முதல் இந்தியர் ஆவார். அந்த நடிகை தமிழில் இரண்டு படங்களில் மட்டுமே தலையை காட்டி உள்ளார்.

ஆனால் தற்போது வரை அந்த நடிகையை மறக்க முடியாமல் தமிழ் ரசிகர்கள் ஏக்கத்தில் உள்ளனர். பாலிவுட்டில் நிறைய படங்களில் நடித்த அவர் பல விருதுகள் வாங்கி உள்ளார். முதலாவதாக நடிகை தமிழில் நாகார்ஜூனுக்கு ஜோடியாக தான் அறிமுகமானார்.

Also Read: ஜோதிகா வாய்ப்பை தட்டிப்பறித்த அனுஷ்கா.. இதெல்லாம் அந்தம்மாக்கு முன்னாடியே நான் செஞ்சிட்டேன்

அதாவது 1997 ஆம் ஆண்டு நாகர்ஜூன் நடிப்பில் வெளியான ரட்சகன் படத்தில் நடித்தவர் சுஷ்மிதா சென். இந்தப் படத்தில் இவருடைய நடிப்பு, நடனம் எல்லாமுமே ரசிகர்களை பெரும் அளவில் கவர்ந்தது. இப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களுமே நல்ல வரவேற்பை பெற்றது.

அதன் பிறகு ஷங்கர் இயக்கத்தில் அர்ஜுன் நடிப்பில் வெளியான முதல்வன் படத்தில் ஷக்கலக்க பேபி என்ற பாடலுக்கு நடனமாடி இருந்தார். இவர் தமிழில் தலைகாட்டியது இந்த இரண்டு படங்களில் மட்டும் தான். ஆனால் தமிழ் சினிமாவில் தற்போது வரை இவருக்கு ரசிகர் கூட்டம் உள்ளது.

Also Read: சூப்பர் ஹிட் படத்தின் 2ம் பாகத்தை மிஸ் செய்த அனுஷ்கா.. ஆர்யா படத்தால் வந்த கெட்ட நேரம்

மேலும் கடந்த இரண்டு வருடங்களாக சுஷ்மிதா சென் இணைய தொடரில் நடித்து வருகிறார். அவரது சொந்த வாழ்க்கையை பொருத்தவரையில் இரண்டு குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். மேலும் ரோஹ்மன் ஷால் என்பவர் உடன் 2018 இல் இருந்து 2021 வரை உறவிலிருந்தார்.

இப்போதை காலகட்டத்தில் கிரிக்கெட் வீரர் மற்றும் தொழிலதிபருமான லலித் மோடியுடன் சுஷ்மிதா சென் டேட்டிங் செய்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் சுஷ்மிதா சென் தமிழ் சினிமாவை விட்டு 20 வருடங்களுக்கு முன்பே போனாலும் இப்போது வரை அவரது மவுசு ரசிகர்கள் மத்தியில் குறையவில்லை.

Also Read: நயன்தாராவாக நடிக்கப்போகும் அனுஷ்கா.. இங்க வேகல அங்கையாது பருப்பு வேகுதானு பார்ப்போம்

Trending News