Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
நேற்றைய எபிசோடில் மகேஷின் அம்மா பார்வதி மற்றும் ஹாஸ்டல் வார்டன் மனோன்மணி பேசிய காட்சிகள் ரசிகர்களுக்கு பெரிய ட்ரீட்டாக அமைந்தது.
ஓரளவுக்கு மகேஷ் வார்டனின் சொந்த மகன் மற்றும் இவர்களுக்குள் என்ன நடந்திருக்கும் என்பதை யூகிக்க முடிகிறது.
இனி வார்டன் அல்லது பார்வதி மகேஷிடம் என்ன நடந்தது என்ற உண்மையை சொல்வது தான் பாக்கி.
இனிதான் பார்வதி ஆட்டம் ஆரம்பம்!
இன்று வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் மகேஷ் மற்றும் வார்டன் ஆனந்திக்காக ஹோட்டலில் காத்து கொண்டு இருக்கிறார்கள்.
இன்னொரு பக்கம் ஆனந்தி தன் தோழிகளுடன் கிளம்பி அன்பு வீட்டுக்கு போகிறாள். மகேஷ்-வார்டன் மற்றும் ஆனந்தி அவளுடைய தோழிகள் ஒரே நேரத்தில் ஹாஸ்டலை விட்டு கிளம்புவதை மித்ரா பார்த்து விடுகிறாள்.
இவங்க எல்லாரும் ஒன்னா தான் போறாங்க என்று நினைக்கும் மித்ராவுக்கு பயங்கரமாக கோபம் வருகிறது. கண்டிப்பாக இதை பார்வதிக்கு போன் பண்ணி சொல்ல போகிறாள்.
ஏற்கனவே பார்வதி மகேஷ், வார்டன், ஆனந்தி, தில்லைநாதன் என அத்தனை பேர் மீதும் பயங்கர கோபத்துடன் இருக்கிறார்.
இப்போ இந்த விஷயம் மட்டும் தெரிந்தால் கண்டிப்பாக ருத்ர தாண்டவம் ஆடி விடுவார். இன்றைய எபிசோடும் ரசிகர்களுக்கு படபட பட்டாசு தான்.
வார்டன் எப்படியும் ஆனந்தியை தன்னுடன் சேர்த்து வைத்து விடுவார் என்று நம்பி மகேஷ் வார்டனிடம் கெஞ்சுவது தான் பார்க்க சகிக்கவில்லை .