சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

தொடர்ந்து பிளாப் கொடுத்தும் ஜெயம் ரவி கையில் இருக்கும் 5 படங்கள்.. நடுத்தெருவில் விட்ட அண்ணன், தூக்கிவிடும் மணிரத்தினம்

Kollywood Actor Jayam Ravi upcoming and flop movies: தமிழ் சினிமாவின் ஸ்மார்ட் ஹீரோவான ஜெயம் ரவி  நடிப்பில் வெளியான படங்கள் சில பிளாக் பஸ்டர் ஹிட் அடித்தாலும் ஒரு சில படங்கள் கை கொடுக்கவில்லை, எந்த நிலையிலும் முதலுக்கு மோசம் இல்லாமல்  சமாளித்து விடுவதால் இயக்குனர்களின் விருப்பத்தேர்வாக எப்போதும் ஜெயம் ரவி இருக்கின்றார்.

பொன்னியின் செல்வன் ஓரளவு கை கொடுத்தாலும் ஜெயம் ரவியின் நடிப்பில் வெளிவந்த அகிலன், இறைவன் போன்றவை எதிர்பார்த்த வெற்றியை கொடுக்காமல்  பிளாப் ஆனது. அவர் நடிப்பில் வெளிவர உள்ள 5 படங்கள்

சைரன்: ஆம்புலன்ஸ் டிரைவராக  நடிப்பதாலோ என்னவோ சைரன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.  அறிமுக இயக்குனர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி மற்றும் போலீஸ் கெட்டப்பில் கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். செய்யாத தவறுக்காக சிறை செல்லும் ஜெயம் ரவி எப்படி மீண்டு வருகிறார் என்பதை சஸ்பென்ஸ் உடன் கூற வருகிறது சைரன்.

Also read: ஜெயம் ரவிக்கு தலைவலியாய் மாறிய அண்ணன்.. அரவிந்த் சாமியால் சிக்கலில் தனி ஒருவன் 2

பிரதர்:  முழு நீள நகைச்சுவையில் ஜெயம் ரவி பிரியங்கா அருள் மோகன் நடிப்பில் எம் ராஜேஷ் இயக்கத்தில் வெளிவர இருக்கும் படம் பிரதர். இசை ஹாரிஸ் ஜெயராஜ், அக்கா தம்பியின் பாசபிணைப்பை அடிப்படையாகக் கொண்டு தயாராகி வருகிறது. ஜெயம் ரவியின் அக்காவாக பூமிகா நடிக்கிறார். படத்தின் ரிலீஸுக்கு முன்பே முன்னணி நிறுவனங்கள் போட்டி போட்டு இப்படத்தின் சாட்டிலைட் உரிமையை  பல மடங்கு லாபத்திற்கு வாங்கி உள்ளது.

காதலிக்க நேரமில்லை : ஜெயம் ரவி நித்யா மேனன் காம்பினேஷனில்  மோஸ்ட் ரொமான்டிக் ஸ்டோரி ரெடி பண்ணி உள்ளார் கிருத்திகா உதயநிதி. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானதிலிருந்து இளைஞர்களின் ஹைப்பை எகிற வைத்திருக்கிறது இந்த படம். ஃபர்ஸ்ட் லுக்கில் நித்தியா மேனனிடம் ரொம்ப க்ளோசாக இருக்கிறார் ஜெயம் ரவி.

தனி ஒருவன் 2: 2015 இல் வெளிவந்த தனி ஒருவன் ஜெயம் ரவிக்கு மட்டுமல்ல ரசிகர்களுக்கும் புதுவிதமான அனுபவத்தை கொடுத்தது. இப்படத்தை ஜெயம் ரவியின் அண்ணன் மோகன் ராஜா இயக்கியிருந்தார் அண்ணனின் இயக்கத்தில் தனி ஒருவன் 2 வும் மற்றும் எம் குமரன் படத்தின் இரண்டாம் பாகமும் நம் இமேஜை மீண்டும் உயர்த்தும் என்று ஜெயம் ரவி எதிர்பார்த்த நிலையில் தொடர்ந்து தாமதித்து வருகிறார் மோகன் ராஜா

தக் லைப்: கமலஹாசன் நடிப்பில் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகி வரும் தக்  லைஃபில் ஜெயம் ரவி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இப்படத்திற்கு இசை ஏ ஆர் ரகுமான். இப்படத்தில் கமலுக்கு அடுத்த படியாக தனது கேரக்டர்ரும் பேசபடும் என்கிற நம்பிக்கையில் உள்ளார்.

Also read: தொடர் தோல்வியால் ஜெயம் ரவியை தூக்கி விடப் போகும் டாப் ஹீரோ.. நிறைவேறப் போகும் நீண்ட நாள் கனவு

Trending News