வெள்ளிக்கிழமை, நவம்பர் 15, 2024

மிரட்டும் திலக் வர்மா, ரிங்கு சிங், பதறும் பவுலர்கள்.. அடி மாடுகளைப் போல் ஊட்டி வளர்த்து டிராவிட் செய்யும் தந்திரம்

Fearless young boys in Indian Cricket:  இளம் கன்று பயமறியாது, இந்திய கிரிக்கெட் அணி இப்பொழுது வேறு ஒரு பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இரண்டு மூன்று விக்கெட்டுகள் விழுந்தால் கூட அடுத்தடுத்து அதிரடி காட்டி பேயாட்டம் ஆடுகிறது.

ஒரு நாள் போட்டிகளில் ரோஹித் சர்மா இதை முன் நின்று நடத்தி வருகிறார் ஆனால் 20 ஓவர் போட்டிகளில் இருக்கும் இளம் படையினர் எல்லோருமே எதிரணி பந்துவீச்சாளர்களை அடித்து துவைத்து துவம்சம் செய்கின்றனர். இந்திய அணியின் வருங்கால கிரிக்கெட் மிரட்டும் விதமாக உருவாகும் என்பதில் சந்தேகம் இல்லை.

20 ஓவர் போட்டிகளை பொறுத்த வரை இப்பொழுது இருக்கும் வீரர்கள் கடும் சவாலாக எதிர் அணிகளுக்கு விளங்கி வருகின்றனர். ஆரம்பத்திலிருந்து எப்பேர்பட்ட பௌலர்களாக இருந்தாலும் அடித்து துவைத்து விடுகின்றனர். எதிரணி வீரர்களுக்கு இந்த சிறு பையன் நம் பந்தை அடித்து மிரட்டுகிறாரே என்ற ஒரு காம்ப்ளக்ஸும் ஏற்படுத்துகிறது.

இந்தியா இப்பொழுது தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக 20 ஓவர் போட்டியில் விளையாடி வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணியின் அணுகுமுறை அச்சுறுத்தும் விதமாக இருக்கிறது. எல்லா அணி வீரர்களும் இந்திய அணியின் இளம் வீரர்களை கண்டு சற்று திகைப்பில் உள்ளனர்.

சுபம் கில், எஸ் எஸ் வி ஜெய் ஸ்வால், சூரியகுமார் யாதவ், திலக் வர்மா, ரிங்கு சிங், இசான் கிசான், ஜித்தேஷ் சர்மா எல்லாருமே பேட்டிங்கில் மிரட்டி வருகிறார்கள். இவர்களை பயமறியா காளைகளைப் போல் உருவாக்கி வருகிறார் ராகுல் டிராவிட்.

இவர்கள் அனைவரும் ராகுல் டிராவிட்டின் தயாரிப்பு. பியர்லெஸ் கிரிக்கெட் ஆடும் விதத்தை தெள்ளத் தெளிவாக கற்றுக் கொடுத்து வருகிறார் ராகுல் டிராவிட். விளையாடி வரும் இளைஞர்கள் அனைவரும் சேவாக் யுவராஜ் சிங் போன்று தொடக்கத்திலிருந்து பவுலர்களை வதம் செய்து வருகின்றனர்.

- Advertisement -spot_img

Trending News