செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

ரிலீசுக்கு முன்பே தோல்வியை உறுதி செய்த விஜய் சேதுபதியின் படம்.. ஈ ஓட்ட கூட ஆள் இல்லையாம்

விஜய் சேதுபதி கைவசம் இப்போது நிறைய படங்கள் உள்ளது. தமிழ் சினிமா மட்டுமின்றி ஹிந்தியிலும் எக்கச்சக்க படங்களை வைத்துள்ளார். இந்த படங்கள் அடுத்தடுத்து வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம். இப்போது விஜய் சேதுபதியின் 46 ஆவது படமான டிஎஸ்பி படம் டிசம்பர் 2ஆம் தேதி வெளியாக உள்ளது.

பொன்ராம் இயக்கத்தில் உருவான இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அனு கீர்த்திவாஸ் நடிக்கிறார். இந்த படத்திற்கு டி இமான் இசையமைத்துள்ளார். இந்நிலையில் விஜய் சேதுபதி படத்துக்கு உள்ள ஆரவாரம் டிஎஸ்பி படத்திற்கு இல்லையாம்.

Also Read : டாப் கியர் செட் ஆகாமல் ரூட்டை மாற்றும் நடிகர்.. விஜய் சேதுபதியுடன் போட்டி போட்ட இளம் ஹீரோக்கு ஏற்பட்ட நிலை

ஏற்கனவே விஜய் சேதுபதி போலீஸ் கெட்டப்பில் நடித்து வெளியான சேதுபதி படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்திலும் டிஎஸ்பி ஆக தான் விஜய் சேதுபதி நடித்துள்ளார். இப்போது இந்த படத்திற்கான புக்கிங் தொடங்கப்பட்ட நிலையிலும் டிக்கெட் வாங்க யாருமே வரவில்லையாம்.

இதற்கான காரணம் என்னவென்றால், டிஎஸ்பி படத்தின் ப்ரோமோஷன் கடந்த வாரம் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் கமல் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார். இந்த படவிழாவில் உலக நாயகனே கலந்து கொண்டாலும் மக்கள் மத்தியில் இந்த படம் சென்றடையவில்லை.

Also Read : ரொம்ப சீக்ரெட்டாய் விஜய் சேதுபதியை வளைத்து போட்ட நடிகை.. ஐஸ்வர்யா ராஜேஷ், காயத்ரி வரிசையில் தெறிக்க விடும் அம்மணி

ஏனென்றால் இதை எந்த சாட்டிலைட் சேனலும் வாங்க முன் வரவில்லை. மாறாக யூடியூப் சேனல் தான் வாங்கி வெளியிட்டது. ஆகையால் தான் டிக்கெட் விற்பனை தொடங்கப்படும் யாருமே வாங்க வரவில்லையாம். இதனால் திரையரங்குகளில் ஈ ஓட்ட கூட ஆள் இருக்காது என்று கூறப்படுகிறது.

இதனால் விஜய் சேதுபதியின் டிஎஸ்பி படம் வெளியாவதற்கு முன்பு தோல்வி உறுதியாகியுள்ளது என பலரும் கூறி வருகிறார்கள். விஜய் சேதுபதி இதிலிருந்த எவ்வாறு மீண்டு வரப்போகிறார் என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது. இந்தச் செய்தி விஜய் சேதுபதி ரசிகர்கள் மற்றும் கோலிவுட் வட்டாரத்தில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

Also Read : உடல் மண்ணுக்கு உயிர் சினிமாவிற்கு.. உடல்நிலை சரியான உடனே விஜய் சேதுபதியை தேடிச் சென்ற கமல்

Trending News