Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

சந்தானத்தை ஓரம்கட்டிய சூரி.. அடுத்தடுத்து ஸ்கோர் செய்த 5 படங்கள்

சந்தானத்தை ஓரம்கட்டிய சூரி.. அடுத்தடுத்து ஸ்கோர் செய்த 5 படங்கள்

Soori : இப்போது காமெடி நடிகர்களுக்கு தமிழ் சினிமாவில் பஞ்சம் ஏற்பட்டது என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் அவர்கள் எல்லாம் ஹீரோ மெட்டீரியலாக மாறிவிட்டார்கள். அதிலும் வெற்றி கண்டு வருகிறார்கள். அந்த வகையில் சந்தானத்தின் படங்கள் வரவேற்பு […]

Soori : இப்போது காமெடி நடிகர்களுக்கு தமிழ் சினிமாவில் பஞ்சம் ஏற்பட்டது என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் அவர்கள் எல்லாம் ஹீரோ மெட்டீரியலாக மாறிவிட்டார்கள். அதிலும் வெற்றி கண்டு வருகிறார்கள்.

அந்த வகையில் சந்தானத்தின் படங்கள் வரவேற்பு பெற்ற நிலையில் அவரை ஓரம்கட்டி விட்டார் சூரி. தொடர்ந்து நடித்து வரும் படங்கள் எல்லாமே ரசிகர்கள் கொண்டாடும் படியாக அமைந்திருக்கிறது. அவ்வாறு சூரி சமீபத்தில் அசத்திய 5 படங்களை பார்க்கலாம்.

முதன் முதலாக சூரியை ஹீரோவாக்கி அழகு பார்த்தது வெற்றிமாறன் தான். விடுதலை படத்தில் கான்ஸ்டபிள் குமரேசனாக திறம்பட நடித்திருந்தார். அவருக்குள் இப்படி ஒரு நடிப்பு திறமை இருக்கிறதா என்பதே பலருக்கும் ஆச்சரியமாக இருந்தது.

சூரிக்கு ஹிட்டாக அமைந்த 5 படங்கள்

அடுத்ததாக சசிகுமார் நடிப்பில் வெளியான கருடன் படத்தில் சூரி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து சூரியின் அடுத்த படம் தான் கொட்டுக்காளி.

பிஎஸ் வினோத் ராஜ் இயக்கத்தில் உருவான கொட்டுக்காளி படம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. இதைத்தொடர்ந்து ராம் இயக்கத்தில் ஏழு கடல் ஏழு மலை படத்தில் நடித்திருந்தார். இதில் நிவின் பாலி கதாநாயகன் என்றாலும் அழுத்தமான கதையில் சூரியும் நடித்திருந்தார்.

கடைசியாக சூரியின் நடிப்பில் வெளியான படம் தான் மாமன். உணர்ச்சிப்பூர்வமான குடும்ப செண்டிமெண்ட் படமாக இந்த படம் வெளியாகி இருந்தது. நல்ல வசூலை அள்ளிய இந்த படம் ஜி5 ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.