செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

சிம்பு போல் கவினுக்கும் உலக நாயகன் கொடுத்த அல்வா.. கும்பிடு போட்டு தலை தறிக்க ஓடிய டாடா

இரண்டாவது இன்னிங்ஸில் ராஜ்கமல் பிலிம்ஸ் ஒரே ஒரு படத்தை மட்டும் தான் தயாரித்திருக்கிறது. லோகேஷ் இயக்கிய விக்ரம் படம் தான். அதன்பின் நிறைய படங்கள் கமிட் ஆகி இன்று வரை அல்வா கொடுத்து வருகிறது. லைன் ஆப்பில் ஏகப்பட்ட படங்களை வைத்துக் கொண்டு டீலில் விட்டு வருகிறது. இதை தவிர மூன்று பிரம்மாண்ட படங்களில் நடித்து வருகிறார் கமல்,

Kalki 2898 AD
Indian 2
Thug Life

    எஸ்டிஆர் 48 சிம்பு நடிக்க தேசிங்கு பெரியசாமி இயக்க, ராஜ்கமல் பிலிம்ஸில் தயாரிப்பதாக இருந்த இந்த படம் இன்று வரை தொடங்கவில்லை. இதற்காக சிம்பு பல வருடங்கள் காத்துக் கிடக்கிறார். நீண்ட முடியை வளர்த்துக் கொண்டு அதே கெட்டப்பில் சுற்றி வருகிறார்.

    கும்பிடு போட்டு தலை தெறிக்க ஓடிய டாடா

    சிம்புவை போல் கவினும் டாடா படத்திற்கு பின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் ஒரு படம் கமிட் ஆனார். கவின் நடிக்க பாடலாசிரியர் விஷ்ணு இடவன் இந்த படத்தை இயக்குவதாக இருந்தது. ஆனால் இதுவும் பழைய சிம்பு பட கதை போல் ராஜ்கமல் நிறுவனம் இதில் மெத்தனம் காட்டியது.

    லோகேஷ் கனகராஜ் தான் கவினுக்கு கமலிடம் சிபாரிசு செய்துள்ளார். ஆனால் இப்பொழுது அவரே கவினை லலித்திடம் அழைத்துச் சென்று இந்த படத்தை தயாரிப்பதற்கு ஏற்பாடு செய்துள்ளார். சிம்புவும் இனிமேல் கமலை நம்பி இருந்தால் வேலைக்காகாது என வேறு தயாரிப்பாளர்களை சந்தித்துக் கொண்டிருக்கிறார்.

    விஷ்ணு இடவன் தயாரிப்பதில் மட்டுமில்லை பாடல் எழுதுவதிலும் கைதேர்ந்த நபர் தான். லோகேஷ் கனகராஜ், விஷ்ணு மற்றும் கவின் எல்லோரும் நல்ல நண்பர்கள். இதன் மூலம் தான் ராஜ்கமல் பிலிம்ஸ் ப்ராஜெக்ட் கைகூடியது ஆனால் அதற்கு கமல்தான் ஒத்துவரவில்லை. இப்பொழுது ராஜ்கமல் நிறுவனம் சிவகார்த்திகேயன் நடித்த அமரன் அமரன் படத்தோடு இந்த படங்களையும் தயாரித்து வருகிறது,

    Indian 2
    KH 234
    Vikram – 2

    ஆண்டவரிடம் வசமாக சிக்கிய சிம்பு

    Trending News