
தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் மாலை நேரங்களை ஆக்கிரமித்திருப்பது சீரியல்கள் தான். வெள்ளித்திரைக்கு இணையாக சின்னத்திரை நடிகர்களுக்கும், தொடர்களுக்கும் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. ஒரு சீரியலின் வெற்றியைத் தீர்மானிக்கும் முக்கிய காரணியாக விளங்குவது டிஆர்பி (Television Rating Point) ஆகும். 2026-ம் ஆண்டின் பிப்ரவரி மாதத் தொடக்கத்தில், தமிழ் சீரியல் உலகில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றங்கள் மற்றும் டாப் 10 இடங்களைப் பிடித்துள்ள தொடர்கள் பற்றி விரிவாகக் காண்போம்.
nn
சன் டிவியின் அசைக்க முடியாத ஆதிக்கம்:
nn
பல ஆண்டுகளாகத் தமிழ் சின்னத்திரையில் முதன்மை சேனலாக விளங்கும் சன் டிவி, 2026-லும் தனது ஆதிக்கத்தைத் தொடர்ந்து வருகிறது. டாப் 5 இடங்களை பெரும்பாலும் சன் டிவி தொடர்களே ஆக்கிரமித்துள்ளன. குறிப்பாக, கிராமப்புற மற்றும் நகர்ப்புற நேயர்களைக் கவரும் வகையில் கதையம்சங்களை அமைப்பதே இவர்களின் வெற்றிக்குக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.
nn
முதலிடத்தில் ‘மூன்று முடிச்சு’:
nn
மிகக் குறுகிய காலத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற தொடர் ‘மூன்று முடிச்சு’. தற்போது 10.34 புள்ளிகளைத் தொட்டு முதலிடத்திற்குச் கடும் போட்டி கொடுத்து வருகிறது. சுவாதி கொண்டேயின் அழுத்தமான நடிப்பு மற்றும் எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த திரைக்கதை முதலிடத்தை தக்கவைத்து கொள்ளுமா என எதிர்பார்க்கப்படுகிறது
nn
இரண்டாம் இடத்தில் ‘சிங்கப்பெண்ணே’ :
nn
தற்போது டிஆர்பி பட்டியலில் 9.89 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் இருப்பது ‘சிங்கப்பெண்ணே’. கிராமத்தில் இருந்து சென்னைக்கு வந்து ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் ஆனந்தியின் போராட்ட குணமும், அவருக்குத் துணையாக நிற்கும் அன்பின் நேசமும் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளது. பெண்களின் சுயமரியாதை மற்றும் உழைப்பைப் போற்றும் விதமாக அமைந்துள்ளதால், குடும்பத் தலைவிகளின் ஃபேவரைட் தொடராக இது நீடிக்கிறது
nn
விஜய் டிவியின் ‘சிறகடிக்க ஆசை’ – கடும் சவால்:
nn
சன் டிவிக்கு இணையாகப் போட்டி போடும் ஒரே சேனல் ஸ்டார் விஜய். இதில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ தொடர் தற்போது மீண்டும் டாப் 5 பட்டியலுக்குள் நுழைந்து சாதனை படைத்துள்ளது.
nn
சிறகடிக்க ஆசை : முத்து மற்றும் மீனாவின் எதார்த்தமான காதல் மற்றும் குடும்ப மோதல்கள் ரசிகர்களை ஈர்த்துள்ளது. குறிப்பாக முத்துவின் நக்கல் மற்றும் மீனாவின் பொறுமைக்கு இணையத்தில் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இது தற்போது 8.00 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளது.
nn
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: தந்தைக்கும் மகன்களுக்கும் இடையிலான பாசப்போராட்டத்தை மையமாகக் கொண்ட இத்தொடரும் டாப் 10 பட்டியலில் தனது இடத்தை உறுதி செய்துள்ளது.
nn
டாப் 10 தமிழ் சீரியல்கள் – தற்போதைய ரேட்டிங் பட்டியல் (2026):
nn
வாரம் தோறும் வெளியாகும் ‘பார்க்’ (BARC) தரவுகளின் அடிப்படையில், தற்போதைய முன்னணி 10 சீரியல்கள் இதோ:
n1.மூன்று முடிச்சு சீரியல் 10.34 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது
n2. சிங்கப்பெண்ணே சீரியல் 9.89 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது
n3. கயல் சீரியல் 9.07 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தில் உள்ளது
n4. மருமகள் சீரியல் 8.67 புள்ளிகளுடன் நான்காம் இடத்தில உள்ளது
n5. எதிர்நீச்சல்-2 சீரியல் 8.57 புள்ளிகளுடன் ஐந்தாம் இடத்தில உள்ளது
n6. அய்யனார் துணை சீரியல் 8.42 புள்ளிகளுடன் ஆறாம் இடத்தில உள்ளது
n7. அன்னம் சீரியல் 8.39 புள்ளிகளுடன் ஏழாம் இடத்தில் உள்ளது
n8. சிறகடிக்க ஆசை சீரியல் 8.00 புள்ளிகளுடன் எட்டாம் இடத்தில் உள்ளது
n9. பாண்டியன் ஸ்டார் சீரியல் 7.79 புள்ளிகளுடன் ஒன்பதாம் இடத்தில் உள்ளது
n10. செல்லமே செல்லமே சீரியல் 6.64 புள்ளிகளுடன் பத்தாம் இடத்தில உள்ளது
nn
எதிர்நீச்சல்-2 சந்தித்த பின்னடைவு:
nn
தமிழ் சின்னத்திரையில் ஒரு புரட்சியை ஏற்படுத்திய தொடர் ‘எதிர்நீச்சல்’. அதன் இரண்டாம் பாகம் மிகுந்த எதிர்பார்ப்புடன் தொடங்கப்பட்டது. இருப்பினும், சமீபத்திய வாரங்களில் இதன் டிஆர்பி சற்றே சரிவைக் கண்டுள்ளது. விறுவிறுப்பு குறைந்த திரைக்கதையே இதற்குத் தற்காலிகக் காரணமாகச் சொல்லப்படுகிறது. இருப்பினும், புதிய கதாபாத்திரங்களின் வருகை இத்தொடரை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
nn
2026-ம் ஆண்டின் தொடக்கத்தில் சன் டிவி தனது ‘சிங்கப்பெண்ணே’ மற்றும் ‘மூன்று முடிச்சு’ மூலம் அசைக்க முடியாத இடத்தில் உள்ளது. அதே சமயம், விஜய் டிவி ‘சிறகடிக்க ஆசை’ மூலம் கிராமப்புற ரசிகர்களையும் ஈர்க்கத் தொடங்கியுள்ளது. வரும் வாரங்களில் புதிய தொடர்களின் அறிமுகம் மற்றும் தற்போதைய தொடர்களின் கிளைமாக்ஸ் காட்சிகள் இந்த பட்டியலை மாற்றியமைக்கலாம்.