சினிமா செய்திகள்

தேர்தலா? சினிமாவா? ஏப்ரல், மே மாதங்களில் மோதும் சூர்யா, விஜய், அஜித், தனுஷ் படங்கள்!

By · 05 மார்ச் 2026 · Updated 07 மார்ச் 2026
Special treat for Suriya fans

தமிழ்நாடு எப்போதும் இரண்டு விஷயங்களுக்காகத் தான் உயிர்வாழும் – ஒன்று அரசியல், இன்னொன்று சினிமா. 2026-ம் ஆண்டு மே மாதம் தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், அதற்கு இணையாகத் திரையரங்குகளிலும் ஒரு மிகப்பெரிய போரே நடக்கப்போகிறது.

1. சூர்யாவின் ‘கருப்பு’ (Karuppu) – ஏப்ரல் 10 ரிலீஸ்?

சூர்யாவின் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘கருப்பு’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் தேதி வெளியாகும் எனத் தெரிகிறது.

2. தனுஷின் ‘காரா’ (Kara) – ஏப்ரல் 30 சிக்கல்!

தனுஷ் இயக்கி நடிக்கும் ‘காரா’ ஏப்ரல் 30-ம் தேதி ரிலீஸாகத் திட்டமிடப்பட்டுள்ளது.

3. அஜித் குமாரின் ‘ரேசிங் ஃபிலிம்’  – மே 1 ஸ்பெஷல்!

தல அஜித் ரசிகர்களுக்கு இந்த மே 1 (அஜித்தின் பிறந்தநாள்) ஒரு டபுள் ட்ரீட்! இது வழக்கமான சினிமா அல்ல. அஜித்தின் கார் பந்தய ஆர்வம், ரேசிங் டிராக்கின் பின்னால் இருக்கும் உழைப்பு மற்றும் பிரபலங்களின் நேர்காணல்கள் அடங்கிய ஒரு முழு நீள ‘டாக்குமெண்டரி’ (Documentary).

4. தளபதி விஜயத்தின் ‘ஜனநாயகன்’ (Jananayagan) – மே 7 அல்லது 14?

அரசியல் களத்தில் குதித்துள்ள விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம், இன்னும் சென்சார் சான்றிதழுக்காகக் காத்திருக்கிறது. அரசியல் வசனங்கள் மற்றும் காட்சிகள் அதிகம் இருப்பதால், சென்சாரில் சில சிக்கல்கள் எழலாம் எனக் கூறப்படுகிறது. தேர்தல் முடிந்த கையோடு, மக்கள் ரிலாக்ஸாக இருக்கும் நேரத்தில் மே 7 அல்லது 14-ல் படத்தை இறக்கப் படக்குழு திட்டமிட்டுள்ளது.

2026 கோடைக்காலம் கோலிவுட்டிற்கு ஒரு அக்னி நட்சத்திரமாக இருக்கப்போகிறது. நான்கு பெரிய நட்சத்திரங்களின் படங்கள், இடையில் சட்டமன்றத் தேர்தல் எனத் தமிழ்நாடு மும்முரமாக இருக்கப்போகிறது. உங்கள் ஓட்டு யாருக்கு என்பது ஒருபுறம் இருக்கட்டும், உங்கள் ‘டிக்கெட்’ எந்தப் படத்திற்கு?