
ஜெ.கே. சந்துருவின் இயக்கத்தில், நடிகை கீர்த்தி சுரேஷ் துப்பாக்கியை ஏந்தியிருக்கும் ‘ரிவால்வர் ரீட்டா’ திரைப்படம் நவம்பர் 28 அன்று திரைக்கு வந்துள்ளது. ‘நடிகையர் திலகம்’ படத்திற்குப் பிறகு நாயகி மையப்படுத்திய கதைகளைத் தேர்ந்தெடுத்து வரும் கீர்த்தி சுரேஷுக்கு, இந்தப் படம் மற்றொரு வெற்றியாக அமையுமா என்ற எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் மத்தியில் வெளியானது.
nn
கதைச் சுருக்கம்
nn
பாண்டிச்சேரியில் வாழும் ரீட்டாவின் (கீர்த்தி சுரேஷ்) வீட்டில், எதிர்பாராத விதமாக ஏரியா ரவுடி டிராகுலா பாண்டியன் (சூப்பர் சுப்புராயன்) இறந்துவிடுகிறார். தனது அப்பாவின் மரணத்துக்குக் காரணமானவர்களைப் பழிவாங்கத் துடிக்கும் டிராகுலாவின் மகனிடமிருந்து, தன்னையும் தன் குடும்பத்தையும் பாதுகாக்க, ரீட்டா துப்பாக்கியை (ரிவால்வர்) கையில் எடுக்கிறார். இந்தச் சவாலான சூழ்நிலையை ரீட்டா எப்படி சமாளிக்கிறார் என்பதை டார்க் காமெடி பாணியில் ஜாலியாகச் சொல்லியிருக்கும் படமே ‘ரிவால்வர் ரீட்டா’.
nn
நடிகர்களின் பங்களிப்பு
nn
கீர்த்தி சுரேஷ் வழக்கம் போல், ஒட்டுமொத்தப் படத்தையும் தனது தோளில் சுமந்து, ஆக்ஷன் மற்றும் காமெடி இரண்டிலும் கச்சிதமாக நடித்து ‘ரீட்டா மீட்டர்’க்கு நியாயம் செய்திருக்கிறார்.
nn
ராதிகா சரத்குமார் ரீட்டாவின் அம்மாவாக வரும் இவர், இரண்டாம் பாதியில் தனது எதார்த்தமான நகைச்சுவையால் கதையை போரடிக்காமல் நகர்த்திச் செல்ல முக்கிய பலமாக இருக்கிறார். “நகரு கண்ணு” என்று சொல்லி காமெடியில் ரகளை செய்திருக்கிறார்.
nn
மற்றவர்கள் ரெடின் கிங்ஸ்லியின் சில காமெடிகள் மட்டுமே சிரிக்க வைக்கின்றன. சென்ராயனின் “ஆத்தா குமார்” கதாபாத்திரம் சில இடங்களில் எரிச்சலை ஏற்படுத்தினாலும், சூப்பர் சுப்புராயன், ஜான் விஜய், அஜய் கோஷ், சுனில் போன்ற மற்ற நடிகர்கள் சிறந்த பங்களிப்பைக் கொடுத்துள்ளனர்.
nn
பாசிட்டிவ்
nn
ஷான் ரோல்டன் பின்னணி இசை படத்தின் டார்க் காமெடிக்கு பக்க பலமாக அமைந்துள்ளது. தினேஷ் கிருஷ்ணனின் கேமரா ஒர்க் மற்றும் பாண்டிச்சேரியின் அழகை ரசிக்கும் விதமாகப் படமாக்கியது அருமை.ஒரே நாளில் நடக்கும் கதை என்பதால், தொய்வு பெரிதாக இல்லை. டார்க் காமெடி சில இடங்களில் ரசிக்க வைக்கிறது.
nn
நெகட்டிவ்
nn
கதைக்களம் மிகவும் வழக்கமானது. பிணத்தை மறைக்கும் போராட்டக் கதைகளை ஏற்கெனவே பலமுறை பார்த்துவிட்டோம். திரைக்கதை மற்றும் கதை முடிவில் எதிர்பார்ப்புக்குரிய திருப்பங்கள் இல்லை. சில இடங்களில் ரெடின் கிங்ஸ்லி, சென்ராயன் காமெடி பெரிதாக ஒர்க் அவுட் ஆகவில்லை. “கோலமாவு கோகிலா”வின் தாக்கம் இல்லை என்பது ஒரு எதிர்பார்ப்பைக் குறைக்கிறது.
nn
சினிமாபேட்டை ரேட்டிங் : 3/5