புதன்கிழமை, ஜனவரி 15, 2025

விஜய்யின் தலைக்கணக்கத்துக்கு அஜித் வைக்கப்போகும் ஆப்பு.. ஃபார்முலாவை மாற்றிய ஏகே..!

பல வருடங்களாக அஜித், விஜய் என்ற பிரச்சனை மட்டுமே இருந்து வந்தது. ஒரு கட்டத்தில் அஜித் நடிப்பில் கவனம் செலுத்தாமல் வருடத்திற்கு ஒரு படம் அல்லது இரண்டு வருடத்திற்கு ஒரு படம் என்று கொடுக்கத் தொடங்கினார். இதனால் விஜய் தொடர்ந்து படங்களை நடித்து தனது சம்பளத்தையும் தனது மார்க்கெட்டையும் அதிகப்படுத்தி நம்பர் ஒன் இடத்திற்கு வந்தார்.

ஒரு கட்டத்தில் அஜித், விஜய் என்ற பிரச்சனை மாறி தற்போது விஜய், ரஜினி என்ற பிரச்சினையில் வந்து முடிந்துள்ளது. அந்த அளவுக்கு விஜய் வளர்ந்து விட்டார். விஜய்க்கு போட்டியாளர் ரஜினி தான் என்று சொல்ல வைத்தார் விஜய். அதற்கு தகுந்தார் போல் அஜித்தும் படங்களை நடிப்பதில் கவனமில்லாமல் அவர் வேறு ஒரு பாதையில் சென்று கொண்டிருந்தார்.

அதேபோல் தனது ரசிகர்களையும் சந்தோஷப்படுத்த ஒரு சில வருடங்களாகவே தவிர்த்து வருகிறார். உண்மையிலேயே இந்த போட்டியில் அஜித் இனிமேல் இல்லை என்று ஒரு நிலைமையை உருவாக்கி விட்டார். துணிவு படத்திற்கு பிறகு அஜித்தின் எந்த ஒரு அப்டேட்டும் ஒழுங்காக வரவில்லை. எப்படியோ கஷ்டப்பட்டு ஆரம்பித்து விடாமுயற்சி படபிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது ஆனால் எப்பொழுது வெளிவரும் என்று தெரியவில்லை.

Also Read : அஜித்திற்கு மாஸான கதையை ரெடி செய்த வெற்றிமாறன்.. வயித்தெரிச்சலில் தனுஷ், விஜய்

இந்த நிலையில் அஜித் தற்பொழுது அவரது நடவடிக்கைகளில் வேகம் காட்டி வருகிறார். எப்பொழுதும் ஒரு படத்தை முடித்து அடுத்த படத்தை தொடங்குவார் ஆனால் தற்பொழுது தொடர்ந்து நான்கு படங்களுக்கு டைரக்டர்களையும், தயாரிப்பாளர்களையும் முடிவு செய்து வைத்துள்ளார். இனிமேல் நடிப்பில் அதிக கவனம் செலுத்த முடிவு செய்துள்ளாராம். விஜய் என்ன ஃபார்முலா பயன்படுத்தி மேலே வந்தாரோ அதே பார்முலாவை இவர் பயன்படுத்த போகிறார்.

வேறு மாநில தயாரிப்பாளர் படத்தில் நடிக்க மாட்டார், அதேபோல் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் கால்ஷீட் கொடுக்க மாட்டார். ஆனால் தற்பொழுது லைக்காவிடம் தொடர்ந்து படம் நடித்து வருகிறார். தெலுங்கில் தனது மார்க்கெட்டை உயர்த்த தெலுங்கு பிரபல தயாரிப்பாளர் மைத்ரி மூவி மேக்கரசுக்கு மிகப்பெரிய பிரமாண்டமான ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார்.

இதற்கு அடுத்து வெற்றிமாறனுடன் இணைந்து படம் பண்ணுவது உறுதியாகிவிட்டது. 2024 அல்லது 2025ல் இந்த படம் கண்டிப்பாக தொடங்கப்படும். இனிமேல் அஜித் இதுவரை செய்யாததை விஜய் செய்வதை போல செய்து தொடர்ந்து தனது ரசிகர்களை மகிழ்ச்சியிலும் தமிழ் சினிமாவை பரபரப்பாக ஆக்குவதிலும் வரும் வருடங்களில் தொடர்ந்து செய்யப் போகிறார்.அஜித் அமைதியாக இருப்பதால் விஜய் மற்றும் அவர்கள் ரசிகர்கள் வாய்க்கு வந்ததை பேசி வருகிறார்கள் அதை செயலின் மூலம் செய்யப் போகிறார் ஏ கே.

Also Read : வயது கூடினாலும் உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறிய அஜித்.. காட்டுத் தீயாக பரவும் புகைப்படம்

Trending News