புதன்கிழமை, ஜனவரி 15, 2025

அப்பா 8 அடி பாஞ்சா குட்டி 16 அடி பாயுது, 12 வயதில் ஒரு கோடி சம்பளம்.. மகேஷ் பாபு மகளுக்கு இப்படி ஒரு தாராள மனசு

Mahesh babu’s Daughter: இங்க எப்படி விஜய் ஆட்ட நாயகனாகவும், வசூல் மன்னனாகவும் ஜொலிக்கிறாரோ அதுபோல தெலுங்கில் மகேஷ் பாபு உச்ச நட்சத்திரமாக ஜொலித்து வருகிறார். இவருக்கென்று ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த குண்டூர் காரம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக எந்தவித நஷ்டம் அடையாமல் லாபத்தை குவித்து விட்டது.

இதனை தொடர்ந்து எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு அடுத்த படத்திற்கு கமிட்டாகி இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் நடைபெற்று வருகிறது. இந்த சூழ்நிலையில் அப்பாவையே மிஞ்சும் அளவிற்கு இவருடைய மகள் சித்தரா ஒரு தரமான சம்பவத்தை செய்து அனைவரது கவனத்தையும் ஈர்த்து இருக்கிறார்.

மகேஷ்பாபு மகள் செய்த தானம்

அதாவது இவருக்கு மகன் கௌதம் மற்றும் மகள் சித்தரா என இரு குழந்தைகள் இருக்கிறார்கள். அதில் மகன் அவ்வப்போது குழந்தை கேரக்டரில் ஒரு சில படங்களில் நடித்து படிப்பையும் தொடர்ந்து செய்து கொண்டு வருகிறார். அதே மாதிரி இவருடைய மகள் சித்தரா வெளிநாட்டில் படித்து வருகிறார்.

இந்த சூழ்நிலையில் சித்தராவுக்கு ஒரு ஆடை விளம்பரத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதை ஏற்றுக் கொண்டு நடித்த இவருடைய மகளுக்கு சம்பளமாக ஒரு கோடி கிடைத்தது. அதை வாங்கிய மகள் அவருடைய சொந்த செலவுக்கு வைத்துக் கொள்ளாமல் தொண்டு நிறுவனத்திற்கு தானம் செய்து அவருடைய தாராள மனசை காட்டி விட்டார்.

முதல் விளம்பரத்தில் நடித்த மகேஷ் பாபுவின் மகள்

mahesh babu daughter (1)
mahesh babu daughter (1)

அப்பாவை விட நடிக்கவும் தெரியும் அதை எப்படி பயன்படுத்தவும் தெரியும் என்று காட்டிவிட்டார். இதை தான் சொல்வார்கள் அப்பா எட்டடி பாஞ்சா குட்டி 16 அடி பாயும் என்று. இவருடைய இந்த செயலை கண்டு பலரும் வியந்து பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள். ஏற்கனவே சித்தராவுக்கு இன்ஸ்டாகிராமில் ஒரு மில்லியனுக்கு மேல் பின் தொடர்ந்து வருகிறார்கள்.

தற்போது இந்த செயலை பார்த்ததும் இவருக்கு பாராட்டுக்களும் வரவேற்புகளும் குவிந்து வருகிறது. அப்படி மகேஷ்பாபுவின் மகள் சித்தரா நடித்த விளம்பரம் என்னவென்றால் “TIMESQUAREEEE!!

Trending News