திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

தாராளமாக கவர்ச்சி காட்ட ஒரு கோடி சம்பளம்.. விஷால் பட மில்க் பியூட்டி செய்த மட்டமான வேலை

சிறந்த நடிகராய் மற்றும் தயாரிப்பாளராக தமிழ் சினிமாவில் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவர்தான் விஷால். இவரின் பல படங்கள் வெற்றி பெற்றுள்ள நிலையில் இவருடன் ஜோடி சேர்ந்த நடிகை செய்த மட்டமான வேலை பரபரப்பை உண்டாக்கி வருகிறது.

செல்லமே, சண்டைக்கோழி, திமிரு, துப்பறிவாளன் போன்ற படங்களில் முன்னணி கதாநாயகனாக வெற்றி கண்டவர் விஷால். அவ்வாறு இருக்கையில் இவர் மில்க் பியூட்டி தமன்னா உடன் இணைந்து நடித்த படம் தான் கத்தி சண்டை. ஆனாலும் இப்படம் இவருக்கு பெருந்தோல்வியை தந்தது.

Also Read: சூப்பர்ஸ்டாரை நம்பி மோசம் போன பிரபல நடிகை.. குடிக்கு அடிமையாகி வாழ்க்கையை வெறுத்த சம்பவம்

ஹிந்தி படங்களில் நடித்து அதன் பின் கேடி என்னும் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் தான் தமன்னா. தென்னிந்தியா சினிமாவில் முக்கிய ஹீரோயினாய் அஜித், விஜய் போன்ற பிரபலங்களுடன் ஜோடியாக நடித்திருக்கிறார். அதன்பின் ஒரு படத்தின் மூலம் ஏற்பட்ட சர்ச்சையால் இன்று வரை தமிழ் சினிமாவில் மார்க்கெட் இழந்து காணப்பட்டு வருகிறார்.

இது ஒரு புறம் இருக்க, தனுஷை வைத்து படிக்காதவன், மாப்பிள்ளை போன்ற படங்களை இயக்கிய சுராஜ், விஷால் மற்றும் தமன்னா நடிப்பில் மேற்கொண்ட கத்தி சண்டை படம் இவருக்கு பெரிதளவு கை கொடுக்கவில்லை. பெரும் தோல்வியை சந்தித்த இப்படத்தில் தமன்னா ஒரு கோடி சம்பளம் பெற்றிருக்கிறார். எப்படி அவருக்கு அதிக சம்பளம் கொடுக்கப்பட்டது என்பது ஆச்சரியம் தான்.

Also Read: பிரபல நடிகரை பதம் பார்க்க தயாரான பாக்கியலட்சுமி சீரியல் நடிகை.. நெட்டிசன்கள் பேச்சுக்கு பதிலடி

இதன் காரணமாக பார்க்கையில், தன் எளிமையான நடிப்பினை வெளிகாட்டி வந்த தமன்னாவை இப்படத்தில் இயக்குனர் அதிக கவர்ச்சியான நடிப்பினை வெளிக்காட்ட சொன்னாராம். அதை தொடர்ந்து அவரும் இப்படத்தில் விருப்பம் இல்லாமல் இத்தகைய கதாபாத்திரத்தை ஏற்றாராம்.

இயக்குனரின் வற்புறுத்தலால் தமன்னா மேற்கொண்ட இச்செயல் இவருக்கு அடுத்தக்கட்ட பட வாய்ப்பை இழக்க செய்தது. இருப்பினும் இப்படத்திற்கு தமன்னா ஒரு கோடி சம்பளத்தை வாங்கியதால் அவர் நடித்துக் கொடுத்துவிட்டார். மேலும் இது போன்ற சர்ச்சையில் சிக்கியதால் தமிழ் சினிமாவில் காணாமல் போன இவர் தற்பொழுது பாலிவுட்டில் ஆர்வம் காட்டி வருகிறார்.

Also Read: பிரதமரை பதவி விலகச் சொன்ன விஜய் டிவி பிரபலம்.. 288-க்கும் மேல் உயிரிழப்பால் கொந்தளித்த சம்பவம்

Trending News