வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

ரொமான்டிக் ஹீரோவாக இருந்து வில்லனாக மாறிய 10 நடிகர்கள்.. சாக்லேட் பாய் நடிகர்களை கொடூரமாக காட்டிய மிஸ்கின்

ரொமான்டிக் ஹீரோவாக ரசிகர்களின் மனதைக் கவர்ந்த 10 நடிகர்கள், அதன்பின் வில்லனாக மிரட்டி உள்ளனர். அதிலும் 90’ஸ் கிட்ஸ்-களின் சாக்லேட் பாயாக இருந்த ஹீரோக்கள் தற்பொழுது இயக்குனர் மிஸ்கின் இயக்கிய படங்களின் மூலம் வில்லன் அவதாரம் எடுத்து தெறிக்க விட்டுக் கொண்டிருக்கின்றனர்.

நரேன்: 2006 ஆம் ஆண்டு வெளிவந்த சித்திரம் பேசுதடி என்னும் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகிற்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பள்ளிக்கூடம், அஞ்சாதே, நெஞ்சிருக்கும் வரை போன்ற படங்களில் வரிசையாக நடித்த நரேன் ஒரு சில தோல்விகளை சந்தித்தார்.

அதன் பிறகு ஹீரோவாக தன்னுடைய தோற்றத்தை மாற்றி வில்லனாக மிஷ்கின் இயக்கத்தில் வெளியான முகமூடி படத்தில் என்ட்ரி கொடுத்திருப்பார். இந்தப் படத்திற்கு ஓரளவு வரவேற்பு மட்டுமே கிடைத்ததால் மீண்டும் தன்னுடைய செகண்ட் இன்னிசை துவங்க நினைத்த நரேனுக்கு ஏமாற்றம் மட்டுமே மிச்சமானது.

மிஷ்கினின் முகமூடி படத்தில் வில்லனாக நரேன்

naren-cinemapettai
narain-cinemapettai

Also Read: 2022 ஆம் ஆண்டில் வில்லனாக மிரட்டிய 5 ஹீரோக்கள்.. கேஜிஎஃப் வில்லனுக்கே டஃப் கொடுத்த ரோலக்ஸ்

வினய் ராய்: 2007 ஆம் ஆண்டு இயக்குனர் ஜீவா இயக்கத்தில் வெளிவந்த உன்னாலே உன்னாலே திரைப்படத்தின் மூலம் அறிமுகமான வினய் ராய் பெண்களின் சாக்லேட் பாயாக வலம் வந்தார். இவர் நடிப்பில் அதிக படம் வெளிவராமல் இருந்தாலும் ஜெயம்கொண்டான், மிரட்டல் போன்ற படங்கள் ரசிகர்களின் ஃபேவரிட் லிஸ்டில் உள்ளது.

அதன்பின் வினய் விஷாலின் துப்பறிவாளன் படம் மூலம் வில்லனவதாரம் எடுத்து திரையில் தனது இன்னொரு முகத்தை காட்டு கொண்டிருக்கிறார். இவருக்கு இப்போது வில்லனாக நடிப்பதற்காக நிறைய படங்கள் குவிந்து கொண்டிருக்கிறது.

பிரசன்னா: 2002 ஆம் ஆண்டு இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த பைவ் ஸ்டார் படத்தின் மூலம் தமிழ் திரை உலகிற்கு அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து அழகிய தீயே, சீனா தானா 001, காதல் டாட் காம், கண்ட நாள் முதல் போன்ற படங்களில் காதல் மன்னனாக கலக்கிய பிரசன்னாவை இயக்குனர் மிஷ்கின் அஞ்சாதே படத்தில் வில்லனாக காட்டி இருப்பார் பிரசன்னாவை இயக்குனர் மிஷ்கின் அஞ்சாதே படத்தில் வில்லனாக காட்டி இருப்பார் மிஸ்கின்.

இந்த படத்தில் பிரசன்னாவின் கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டது. அதனைத் தொடர்ந்து திருட்டுப் பயலே 2 படத்திலும் வில்லனாக நடித்தார். ஆனால் இந்தப் படம் பிரசன்னாவுக்கு கைகொடுக்கவில்லை.

மிஷ்கினின் முகமூடி படத்தில் வில்லனாக பிரசன்னா

prasanna-cinemapettai
prasanna-cinemapettai

Also Read: IMDB இந்தியளவில் பாப்புலரான 6 பிரபலங்கள்.. அஜித், விஜய்யை காணாமல் ஆக்கிய நடிகர்

அர்ஜுன்: ஆக்சன் கிங் அர்ஜுன் அவர்கள் அந்த காலகட்டத்தில் மாஸ் ஹீரோக்களில் ஒருவராக இருந்தார். ஜென்டில்மேன், முதல்வன், ரிதம், ஜெய்ஹிந்த் போன்ற ஹிட் படங்களை கொடுத்தாலும் தற்பொழுது கடல், இரும்புத்திரை போன்ற படங்களின் மூலம் வில்லனாக கலக்கி வருகிறார். அதிலும் திரைப்படத்தில் விஷால் அர்ஜுன் காம்போ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

அரவிந்த் சாமி: இயக்குனர் மணிரத்தினம் இயக்கிய தளபதி படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் அரவிந்த்சாமி அதனைத் தொடர்ந்து ரோஜா, பம்பாய், மின்சார கனவு போன்ற படங்களின் நடித்ததன் மூலம் ரசிகர்களின் ட்ரீம் பாயாக வலம் வந்தார். தற்பொழுது தனி ஒருவன் படத்தின் மூலம் ஆக்சன் கலந்த வில்லன் அவதாரம் எடுத்து மிரட்டினார்.

Also Read: இயக்கம், ஹீரோ, வில்லன் என அனைத்திலும் மாஸ் காட்டிய 5 நடிகர்கள்.. ஆல் ரவுண்டர் என நிரூபித்த SJ சூர்யா

சூர்யா: இவர் ஹீரோவாக ஏகப்பட்ட படங்களில் நடித்து ரசிகைகளின் மனதை கொள்ளை அடித்த நிலையில், தனது வித்தியாசமான நடிப்பை வெளி காட்ட வேண்டும் என விக்ரம் படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் முதல் முதலாக வில்லனாக நடித்திருக்கிறார்.

இவர் இரண்டே நிமிடம் மட்டுமே படத்தில் தோன்றினாலும் படம் பார்த்தோரை மிரளவிடம் அளவுக்கு தன்னுடைய உச்சகட்ட, வெளித்தனமான நடிப்பை வெளிக்காட்டி இருப்பார். இந்தப் படத்திற்குப் பிறகு சூர்யாவை மீண்டும் ரோலக்ஸ் ஆக பார்க்க வேண்டும் என ரசிகர்களும் விரும்புகின்றனர்.

இவர்களது வரிசையில் சீயான் விக்ரம் நடிப்பில் இருமுகன், நடிகர் அஜித் நடிப்பில் மங்காத்தா, நவரச நாயகன் கார்த்திக் முத்துராமன் நடிப்பில் அனேகன், கார்த்தி நடிப்பில் வெளியான காஷ்மோரா போன்ற படங்களில் தங்களது வில்லத்தனமான நடிப்பை வெளிப்படுத்தி இந்தப் 10 ஹீரோக்களும் ஹீரோக்களாக மட்டுமல்லாமல் வில்லத்தனத்திலும் நாங்கள் தான் கெத்து என்பதை காட்டியுள்ளனர்.

Trending News