புதன்கிழமை, ஜனவரி 15, 2025

லியோவை ஓவர் டேக் செய்யும் வெங்கட் பிரபு.. தளபதி 68-ல் இணைந்த 10 பிரபலங்களின் லிஸ்ட்

Leo-Thalapathy 68: விஜய், லோகேஷ் கூட்டணியில் உருவாகி இருக்கும் லியோ விரைவில் வெளியாக இருக்கும் சூழலில் மிகப்பெரும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால் அதையே ஓவர் டேக் செய்யும் அளவுக்கு தளபதி 68 பற்றிய தகவல்கள் தான் சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது.

நேற்று இப்படத்திற்கான பூஜை கோலாகலமாக நடைபெற்ற நிலையில் தற்போது இதில் இணைந்திருக்கும் நட்சத்திரங்களின் லிஸ்ட்டும் இணையத்தை கலக்கி கொண்டிருக்கிறது. அதன்படி ஜெயராம், பிரபுதேவா, பிரசாந்த், மைக் மோகன், வைபவ் என ஐந்து ஹீரோக்கள் விஜய்க்காக களம் இறங்கி உள்ளனர்.

Also read: வேகம் எடுக்கும் தளபதி 68.. ஒன்று கூடும் ஜாம்பவான்கள், அரண்டு போன லோகேஷ்

இது ஏற்கனவே அரசல் புரசலாக பேசப்பட்டாலும் மைக் மோகன் இதில் நடிப்பது வேற லெவல் சர்ப்ரைஸ் தான். ஏனென்றால் ஹீரோவாக மட்டும் தான் நடிப்பேன் என்பது அவருடைய பல வருட பாலிசி. இருப்பினும் அவருடைய கேரக்டர் விஜய் உடன் படம் முழுக்க பயணிக்கும் படியாக இருக்கும் என்பதால் தான் இதில் நடிக்க ஒப்புக்கொண்டாராம்.

இதற்கு அடுத்தபடியாக சினேகா, மீனாட்சி சவுத்ரி, லைலா, பிரியங்கா மோகன், அபர்ணா தாஸ் உள்ளிட்ட ஐந்து நாயகிகளும் நடிக்க இருக்கின்றனர். விஜய் ஆண்டனியின் கொலை படத்தில் நடித்திருந்த மீனாட்சி சவுத்ரி இதன் மூலம் அதிக கவனம் பெற்றுள்ளார். இதில் அவர் இளவயது விஜய்க்கு ஜோடியாகியுள்ளார்.

Also read: ஐயோ அது ரொம்ப சின்ன பொண்ணுங்க.. பதறிய விஜய் சேதுபதி, ஷாக் கொடுத்த விஜய்

அதேபோன்று மற்றொரு விஜய்க்கு சினேகா ஜோடியாக நடிக்கிறார். மேலும் பிரியங்கா மோகன் இல்லை என்று கூறப்பட்ட நிலையில் தற்போது அவரும் இதில் இணைந்துள்ளாராம். அதைத்தொடர்ந்து லைலா முதல் முறையாக விஜய் படத்தில் நடிக்க இருப்பதும் வரவேற்கப்படுகிறது.

இப்படியாக இந்த 10 பிரபலங்களும் விஜய் உடன் நடிக்க இருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே லியோவில் ஒட்டுமொத்த நட்சத்திர பட்டாளங்களும் நடித்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஆனால் அதையே ஓவர் டேக் செய்யும் அளவுக்கு வெங்கட் பிரபு தரமான சம்பவத்தை நிகழ்த்த தயாராகி விட்டார்.

Also read: வாய்க்கு பூட்டு போட்ட மாஸ் ஹீரோக்கள்.. பூதாகரமாக வெடித்த விவகாரம், ஒருத்தர் விடாம பங்கம் செய்யும் ப்ளூ சட்டை

Trending News