புதன்கிழமை, ஜனவரி 15, 2025

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவது யார்.? கூண்டோடு நாமினேஷனில் சிக்கிய 10 போட்டியாளர்கள்

Biggboss 8: விஜய் டிவியின் பிக்பாஸ் நாளுக்கு நாள் ரணகளமாக சென்று கொண்டிருக்கிறது. அதில் போட்டியாளர்கள் தங்கள் பங்குக்கு கன்டென்ட் கொடுக்க வேண்டும் என கத்தி ஆர்ப்பாட்டம் செய்து எரிச்சலூட்டி வருகின்றனர்.

அதிலும் அன்ஷிதா நேற்று நடந்து கொண்டது பார்வையாளர்களை கடுப்பேற்றி இருக்கிறது. இந்த வாரம் முதல்ல இந்த பொண்ண புடிச்சு வெளிய தள்ளுங்க என கொந்தளித்து வருகின்றனர். ஆனால் அவர் நாமினேஷனில் கிடையாது.

இருப்பினும் இந்த வாரம் இந்த லிஸ்டில் 10 பேர் கொத்தாக சிக்கி இருக்கின்றனர். அதன்படி தீபக், ஜாக்லின், ரஞ்சித், சௌந்தர்யா, முத்துக்குமரன், ஜெஃப்ரி, விஷால், அர்னவ், சாச்சனா, தர்ஷா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

biggboss-vote
biggboss-vote

இந்த வாரம் வெளியேறுவாரா அர்னவ்.?

இதில் அர்னவ் வெளியேறுவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. ஏனென்றால் தன்னை ஹீரோவாக காட்டிக் கொள்ளப் போகிறேன் என்ற திட்டத்தோடு அவர் செய்யும் அத்தனையும் ஃபேக் என்பது வெளிப்படையாக தெரிகிறது.

தன் ஒரிஜினல் குணத்தை மறைத்துக் கொண்டு நாடகம் ஆடும் அவரை பார்வையாளர்களுக்கும் பிடிக்கவில்லை. அதனால் அவருக்கு ஓட்டு கிடைப்பது ரொம்பவே கஷ்டம் தான்.

தற்போதைய ஓட்டிங் நிலவரப்படி அவர்தான் கடைசி இடத்தில் இருக்கிறார். ஞாயிற்றுக்கிழமை ரவீந்தர் வெளியேறும் போது இவர் பற்றி சொன்ன விஷயங்கள் அனைத்தும் உண்மையாக இருந்தது. அதுவும் அவர் இந்த வாரம் நாமினேஷனில் சிக்குவதற்கு காரணமாக இருந்தது.

Trending News