வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 10 படங்கள்.. விஜய்க்கு டஃப் கொடுக்கும் விக்ரம்

This Week Theatre and OTT Release Movies: ஒவ்வொரு வாரமும் தியேட்டர் மற்றும் ஓடிடி தளங்களில் எக்கச்சக்க படங்கள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் இந்த வாரம் கிட்டத்தட்ட 10 படங்கள் வெளியாகிறது. கடந்த வாரம் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் மற்றும் ஜப்பான் போன்ற படங்கள் மோதிக்கொண்டது. அந்த வசூலை முறியடிக்க இந்த வாரம் என்னென்ன படங்கள் வெளியாகிறது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

அந்த வகையில் மலையாள நடிகர் மம்முட்டி மற்றும் ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள காதல் தி கோர் என்ற படம் வருகின்ற நவம்பர் 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்திற்கான பிரமோஷன் தற்போது படு பயங்கரமாக நடந்து வருகிறது. அடுத்ததாக யோகி பாபு குய்கோ என்ற படத்தில் நடித்திருக்கிறார்.

இந்த படம் நவம்பர் 24 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகயுள்ள நிலையில் வித்தார்த், இளவரசு மற்றும் வினோதினி போன்ற நடிகர்கள் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். அடுத்ததாக பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான சின்னத்திரை நடிகர் ரியோ நடிப்பில் உருவாகியுள்ள ஜோ படமும் இதே நாளில் வெளியாகிறது.

Also Read : யோகி பாபு இடத்தை பிடித்த விஜய்யின் செல்லபிள்ளை.. இவர் இல்லனா தளபதி நடிக்க மாட்டாராம்

இதை அடுத்து ரிச்சர்ட் ரிஷி, யாஷிகா ஆனந்த் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் சில நொடிகளில் படம் நவம்பர் 24 திரைக்கு வருகிறது. மேலும் சந்தானம், ராதிகா ப்ரீத்தி ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் பில்டப் படமும் இதே நாளில் தான் தியேட்டரில் வெளியாக உள்ளது.

மேலும் பல வருடங்களாக கிடப்பில் போடப்பட்டிருந்த விக்ரமின் துருவ நட்சத்திரம் நவம்பர் 24 தியேட்டரில் வெளியாகிறது. கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகம் நிலவி வருகிறது. விஜய்யின் லியோ படமும் இதே நாளில் நெட்பிளிக்ஸில் வெளியாகிறது.

ஆகையால் விஜய்க்கு விக்ரம் டஃப் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் அமேசான் பிரைமில் தி வில்லேஜ் என்ற ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் வெளியாகிறது. சித்தார்த்தின் சித்தா நவம்பர் 28 ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்திலும், பிரேம்ஜியின் சத்திய சோதனை படம் ஆஹா ஓடிடி தளத்தில் நவம்பர் 24 அன்று வெளியாகிறது.

Also Read : விஜய்யை காலை வாரிவிட்ட ஜோதிகா.. 3 ஹீரோக்களுக்கு மட்டும் கொடுத்த கௌரவம்

Trending News