திங்கட்கிழமை, டிசம்பர் 30, 2024

தியேட்டரில் மிரள விட்ட 10 பேய் படங்கள்.. சந்திரமுகிக்கே டஃப் கொடுத்த காஞ்சனா

கோலிவுட்டில் காமெடி மற்றும் ஆக்சன் படங்களின் மத்தியில் பேய் படங்களும் ஆதிக்கம் செலுத்துகின்றது. அதிலும் ஹாரர் ஃபிலிம் என்றாலே விரும்பும் சினிமா பிரியர்களும் உண்டு. அப்படி ரசிகர்களை திரையரங்கில் மிரள விட்ட டாப் 10 படங்களின் லிஸ்ட் இணையத்தில் வெளியாகி கலக்கிக் கொண்டிருக்கிறது. இதில் 8-ம் நம்பர் வீடு, டார்லிங் போன்ற படங்கள் 10-ம் மற்றும் ஒன்பது இடங்களை பிடித்திருக்கிறது.

தில்லுக்கு துட்டு: 2016 ஆம் ஆண்டு இயக்குனர் ராம் பாலா இயக்கத்தில் வெளிவந்த நகைச்சுவை மற்றும் திகில் திரைப்படம் ஆகும். இதில் சந்தானம் மற்றும் அஞ்சலி சிங் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தில்லுக்கு துட்டு படத்திற்கு இசையமைப்பாளர் எஸ் தமன் இசையமைத்துள்ளார். இப்படம் ஹாரர் பிலிம் போல் மட்டும் இல்லாமல் காமெடி கலந்த படமாகவும் அமைந்தது.

இது வணிக ரீதியாக மாபெரும் வெற்றி பெற்றது.இதனைத் தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு தில்லுக்கு துட்டு இரண்டாம் பாகம் வெளியானது. நேர்மறையான விமர்சனங்களை பெற்றதோடு வசூல் ரீதியாகவும் வெற்றி படமாக அமைந்தது. இதில் சந்தானத்தின் நடிப்பானது அனைவரும் ரசிக்கக்கூடிய விதத்தில் அமைந்துள்ளது. தில்லுக்கு துட்டு ஹாரர் படங்களின் வரிசையில் 8-வது இடத்தை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: வாழ்க்கையில் மிஸ் பண்ணக்கூடாத 10 மலையாள த்ரில்லர் படங்கள்.. திடுக்கிடும் மர்மம் நிறைந்த ‘சி யூ சூன்’

பிசாசு: 2014 ஆம் ஆண்டு இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் பாலாவின் தயாரிப்பில் வெளிவந்த ஒரு திகில் திரைப்படம் ஆகும்.இதில் புதுமுக நடிகர்களான நாகா, பிரயாகா மார்ட்டின், ராதா, ராஜ்குமார் மற்றும் அஸ்வத் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஹிட் அடித்தது இதனைத் தொடர்ந்து 2ம் பாகம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு மே மாதம் இதற்கான டீசர் வெளியிடப்பட்டுள்ளது.

பிசாசு 2 படத்தில் வசனங்கள் எதுவும் இன்றி காட்சிகள் மட்டும் இடம்பெற்று இருந்த போஸ்டரில் விஜய் சேதுபதி கௌரவத் தோற்றத்தில் நடித்துள்ளார். இவருடன் இந்த படத்தில் ஆண்ட்ரியா, பூர்ணா சந்தோஷ, பிரதாப், நமீதா, கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பிசாசு படத்தின் இசையானது ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்துள்ளது. பிசாசு திரைப்படம் ஹாரர் படங்களின் வரிசையில் 7-வது இடத்தில் உள்ளது .

டிமான்ட்டி காலனி:2015 ஆம் ஆண்டு இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளிவந்த ஒரு திகில் திரில்லர் திரைப்படம். இதில் அருள்நிதி, ரமேஷ் திலக், சனந்த் , அபிஷேக் ஜோசப் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.இப்படம் நேர்மறையான விமர்சனங்களை பெற்று வசூல் ரீதியாக மாபெரும் வெற்றி பெற்றது.

டிமான்ட்டி காலனியின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து டிமான்ட்டி காலனி 2 விரைவில் வெளியாக உள்ளது.இதில் அருள்நிதிக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. டிமான்ட்டி காலனி டாப் 10 ஹாரர் படங்களின் வரிசையில் 6-வது இடத்தை பிடித்துள்ளது.

Also Read: 2022ல் ஒடிடியை மிரட்டிய 8 வெப் தொடர்கள்.. வீரவிளையாட்டை விட்டு கொடுக்காமல் வெளிவந்த ‘பேட்டை காளி’

யாமிருக்க பயமே:2014 ஆம் ஆண்டு வெளியான ஒரு ஹாரர் மற்றும் காமெடி திரைப்படம் ஆகும்.இயக்குனர் டி கே இயக்கத்தில் கிருஷ்ணா, ஓவியா, ரூபா மஞ்சரி கருணாகரன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இதில் தொலைக்காட்சி தொகுப்பாளராக கிருஷ்ணா நடித்துள்ளார். தந்தையின் சொத்தை கைப்பற்ற செல்கிறார் அங்கு ஆவி இருப்பதை கண்டறிகின்றனர் பின்னர் அங்கிருந்து அவர்கள் எவ்வாறு தப்பிக்கின்றனர் என்பதே படத்தின் கதை கருவாகும். இப்படம் பாக்ஸ் ஆபிஸில் மாபெரும் வெற்றி பெற்றது. யாமிருக்க பயமே திரைப்படம் திரையரங்கில் மிரள விட்ட ஹாரர் படங்களின் வரிசையில் 5-வது இடத்தை பிடித்துள்ளது.

யாவரும் நலம்: 2009 ஆம் ஆண்டு இயக்குனர் விக்ரம் குமார் இயக்கத்தில் வெளிவந்த திகில் நிறைந்த திரைப்படம்.திரில்லருக்கே உரிய கிரேன் டோனை பயன்படுத்தி இருப்பது படத்தின் சுவாரசியத்தை கூடுகிறது. இப்படத்தில் மாதவன், நீது சந்திரா, சச்சின் ஹெடக்கர், தீபக் டோப்ரியால், முரளி ஷர்மா மற்றும் சரண்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இத்திரைப்படம் தமிழ் மற்றும் ஹிந்தி ஆகிய இரு மொழிகளில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்றது. இந்திய சினிமாவில் பேய் படத்திற்கு புதிய இலக்கணத்தை வகுத்த யாவரும் நலம் படத்தின் இரண்டாம் பாகம் வெளிவருமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது .
யாவரும் நலம் படம் டாப் 10 ஹாரர் படங்களின் வரிசையில் 4-வது இடத்தை பிடித்துள்ளது .

அரண்மனை: 2014 ஆம் ஆண்டு இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான நகைச்சுவை மற்றும் திகில் திரைப்படம் ஆகும்.இதில் சுந்தர் சி, வினய் ஹன்சிகா மோத்வானி, லட்சுமிராய், ஆண்ட்ரியா, சந்தானம், கோவை சரளா மற்றும் மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தில் காதல் நகைச்சுவை, வஞ்சகம், பழிவாங்குதல் போன்ற கதைகளைத்துடன் சுவாரசியம் குறையாமல் நகைச்சுவை கலந்த திகில் நிறைந்த படமாக அமைந்துள்ளது.

இதில் சந்தானத்தின் நகைச்சுவை ரசிகர்களை ஈர்க்கும் வண்ணம் அமைந்துள்ளது. அரண்மனை படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் அடுத்த அடுத்த பாகங்கள் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்று வசூலை வாரி குவித்தது. அரண்மனை டாப் 10 ஹாரர் படங்களின் வரிசையில் 3-வது இடத்தில் உள்ளது.

Also Read: சத்யராஜ், ரஜினிக்கு நிகராக மிரட்டிய 5 படங்கள்.. இப்பவும் மறக்கமுடியாத என்னம்மா கண்ணு சௌக்கியமா!

சந்திரமுகி:2005 ஆம் ஆண்டு இயக்குனர் பி வாசு இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம்.இதில் ரஜினிகாந்த் உடன் நயன்தாரா, ஜோதிகா, வடிவேல், பிரபு மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்தில் வேட்டையபுரம் அரண்மனையை ஒரு திகில் நிறைந்த இடமாக காட்டுகின்றனர். அந்த அரண்மனையில் இருக்கும் சந்திரமுகி என்னும் ஆவி ஜோதிகாவின் உடம்பிலிருந்து கொண்டு வேட்டையன் ராஜாவை பழி வாங்குவதுபோல கதைக்களம் அமைந்துள்ளது.

சந்திரமுகி படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்து மாபெரும் வசூல் சாதனை படைத்தது. இந்த படம் 1999 இல் வெளியான படையப்பா பட வசூலை முறியடித்து சாதனை படைத்தது. சந்திரமுகி திரைப்படம் ஹாரர் படங்களின் வரிசையில் 2வது இடத்தை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

காஞ்சனா: 2011 ஆம் ஆண்டு இயக்குனர் ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த பயம் கலந்த நகைச்சுவை படமாக அமைந்தது. இதில் ராகவால் லாரன்ஸ் உடன் சரத்குமார், லட்சுமி ராய், கோவை சரளா, தேவதர்ஷினி மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படம் சில ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த முனி திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக வெளிவந்தது. காஞ்சனா படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் அடுத்த அடுத்த பாகங்கள் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்றது. காஞ்சனா திரைப்படம் சந்திரமுகிக்கே டஃப் கொடுத்து டாப் 10 ஹாரர் படங்களின் வரிசையில் முதலாவது இடத்தில் உள்ளது.

இவ்வாறு இந்த 10 படங்கள் தான் திரையரங்குகளில் ரசிகர்களை மிரட்டிய ஹாரர் படங்களாகும். இந்தப் படங்களின் வெற்றி என்பது படத்தைப் பார்ப்போரை எந்த அளவுக்கு பயமூட்டியது என்பதில்தான் அமைந்திருந்தது. அதிலும் காஞ்சனா படத்தைப் பார்ப்போரை கொலை நடுங்க வைத்தது.

Trending News