Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

அதிக சம்பளம் வாங்கும் 10 இயக்குனர்கள்.. அட்லீயை மிஞ்சிய டைரக்டர்

அதிக சம்பளம் வாங்கும் 10 இயக்குனர்கள்.. அட்லீயை மிஞ்சிய டைரக்டர்

Atlee : ஒரு படத்தின் நாயகனாக பார்க்கப்படுவது இயக்குனர்கள் தான். அவர்களை சுற்றி தான் கதையின் அம்சங்கள் அமைந்திருக்கிறது. இப்போது ஹீரோக்களுக்கு சமமாக இயக்குனர்களும் சம்பளம் வாங்கி வருகிறார்கள். அந்த வகையில் அதிகம் சம்பளம் வாங்கும் பத்து இயக்குனர்களை […]

Atlee : ஒரு படத்தின் நாயகனாக பார்க்கப்படுவது இயக்குனர்கள் தான். அவர்களை சுற்றி தான் கதையின் அம்சங்கள் அமைந்திருக்கிறது. இப்போது ஹீரோக்களுக்கு சமமாக இயக்குனர்களும் சம்பளம் வாங்கி வருகிறார்கள்.

அந்த வகையில் அதிகம் சம்பளம் வாங்கும் பத்து இயக்குனர்களை பார்க்கலாம். முதலிடத்தில் பாகுபலி புகழ் ராஜமவுலி ஒரு படத்திற்கு கிட்டத்தட்ட 200 கோடி சம்பளம் வாங்குகிறார். அவருக்கு அடுத்தபடியாக அட்லீ தான் உள்ளார்.

அல்லு அர்ஜுனை வைத்து இயக்கும் படத்திற்கு சன் பிக்சர்ஸ் 100 கோடி சம்பளம் கொடுப்பதாக கூறப்படுகிறது. அடுத்ததாக கேஜிஎஃப் பட இயக்குனர் பிரசாந்த் நீல் 90 கோடி சம்பளம் வாங்குகிறார். இதை அடுத்து ராஜ்குமார் ஹிரானி 80 கோடி சம்பளம் பெற்று நான்காவது இடத்தில் இருக்கிறார்.

அதிக சம்பளம் வாங்கும் 10 இயக்குனர்கள்

ஐந்தாவது இடத்தில் புஷ்பா இயக்குனர் சுகுமார், லோகேஷ் போன்றோர் ஒரு படத்திற்கு 40 கோடி வரை சம்பளம் பெறுகின்றனர். அடுத்ததாக பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் ஒரு படத்திற்கு 35 கோடி வரை சம்பளம் பெற்று வருகிறார்.

நெல்சன் திலீப்குமார் தற்போது ஜெயிலர் படத்தை இயக்கி வரும் நிலையில் அவரது சம்பளம் 32 கோடி ஆகும். ஏ ஆர் முருகதாஸ், மணிரத்னம் போன்றோர் ஒரு படத்திற்கு 20 கோடி வரை சம்பளம் பெற்று வருகின்றனர்.

வெற்றி படங்களை மட்டுமே கொடுத்து வரும் வெற்றிமாறனின் சம்பளம் 15 கோடியாகும். மேலும் ஹெச் வினோத் பா ரஞ்சித் போன்ற இயக்குனர்கள் ஒரு படத்திற்கு 10 கோடி வரை சம்பளம் பெற்று வருகின்றனர்.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.