Happy Birthday Vijay: தளபதி விஜய் இன்று தன்னுடைய ஐம்பதாவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருடைய ரசிகர்களை தாண்டி ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் அவர்களிடம் பிடித்த விஷயம் என்றால் பிட்னஸ் தான். 30 வயது மதிக்கத்தக்க இளைஞன் போலவே அவருடைய தோற்றம் இருப்பது தான் அவருடைய பாசிட்டிவ் என்று கூட சொல்லலாம்.
விஜய் ரசிகர்களுக்கு அவரைப் பற்றி நிறைய விஷயங்கள் தெரிந்திருக்க வாய்ப்புகள் அதிகம். ஆனால் இந்த செய்தியில் வரும் இந்த பத்து விஷயங்கள் கண்டிப்பாக பெரும்பாலும் பலருக்கு தெரிந்திருக்காது. அவற்றைப் பற்றி பார்க்கலாம்.
*.விஜய், குழந்தை நட்சத்திரமாக வெற்றி, குடும்பம், வசந்த ராகம், இது எங்கள் நீதி, நான் சிகப்பு மனிதன் போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.
*.வி வி கிரியேஷன்ஸ் என்னும் தயாரிப்பு நிறுவனம் விஜய் மற்றும் அவருடைய தங்கை வித்யா பெயரில் அவருடைய அப்பா சந்திரசேகர் தொடங்கியது. விஜய் நடித்த ஆதி மற்றும் நெஞ்சினிலே போன்ற படங்களை இந்த நிறுவனம் தயாரித்திருக்கிறது.
*.விஜய் தீவிரமான ரஜினி ரசிகர். அவரைப் போல் ஆக வேண்டும் தான் என சினிமாவுக்கு வந்தது. இன்று இவர்கள் இருவருக்குமே போட்டி வந்தது, விதியின் விளையாட்டு என்று கூட சொல்லலாம்.
*.விஜய் வெளிநாடு சென்றிருந்தபோது டாம் குரூஸ் பீச் ஹவுஸ் பார்த்துவிட்டு, அதே மாதிரி கட்டியதுதான் அவருடைய நீலாங்கரை வீடு.
*.கடந்த 2007 ஆம் ஆண்டு, விஜய் திரைத்துறையில் செய்த சாதனைக்காக எம்ஜிஆர் யுனிவர்சிட்டி அவருக்கு டாக்டரேட் பட்டம் கொடுத்தது.
*.43 வயது வரை விஜய் இளைய தளபதி ஆக அழைக்கப்பட்ட நிலையில், 2015 ஆம் ஆண்டு மெர்சல் படத்தின் மூலம் தளபதி என மாற்றியவர் அட்லி.
*.விஜயின் மகனின் பெயர் வித்தியாசமாக யோசித்து வைக்கப்பட்டது தான். அவருடைய மனைவி சங்கீதாவின் பெயரில் வரும் SAN, மற்றும் விஜய்யின் பெயரில் கடைசியில் வரும் JAY சேர்த்து சஞ்சய் என வைக்கப்பட்டது.
*.மலையாளி அல்லாத ஒரு நடிகருக்கு கேரளாவில் செல்வாக்கு இருக்கிறது என்றால் அது விஜய்க்கு மட்டும்தான். அங்குள்ள ஹீரோக்களுக்கு கூட்டியாக விஜயின் பாக்ஸ் ஆபீஸ் ரேட் இருக்கிறது.
*.சூப்பர் ஸ்டாருக்கு பிறகு முதல் 100 கோடி கிளப்பில் இணைந்தவர் விஜய் தான். அவருடைய துப்பாக்கி படம் 130 வசூல் செய்தது.
*.இதுவரைக்கும் விஜய் 13 படங்களில் தன்னுடைய சொந்த பெயரில் நடித்திருக்கிறார்