யூடியூப்பில் மில்லியன் கணக்கில் வியூஸ்பெற அதிகளவில் பணம் கொடுத்தால் அதை திட்டமிட்டு புரமோட் செய்கிறார்கள் என்று யுவன் சங்கர் ராஜா தெரிவித்துள்ளார்.
தி கோட் படத்தில் சொதப்பிய யுவன்?
சினிமாவில் 20 ஆண்டுகளாக முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் யுவன் சங்கர் ராஜா. இவர் இசைஞானியின் மகனாக இருந்தாலும் தனக்கென தனிப்பாதையில் சென்று இளைஞர்களின் ஃபேவரேட் இசையமைப்பாளராக உள்ளார். சமீபத்தில் இவர் இசையமைத்த படம் விஜயின் தி கோட். ஆனால் இப்படத்தில் இடம்பெற்ற விசில் போடு, சின்ன சின்ன கண்கள் உள்ளிட்ட பாடல்கள் கலவையான விமர்சனங்களைப் பெற்றன.
புதிய கீதை படத்திற்குப் பின் விஜய் படத்திற்கு இசையமைக்க வாய்ப்பு கிடைத்தும் யுவன் சொதப்பி விட்டார் என்று பலரும் விமர்சித்தனர். இந்தப் பாடல்கள் வழக்கமாக விஜயின் பாடல்கள் ரிலீசான குறிப்பிட்ட சில மணி நேரங்களில் பல மில்லியன் ரீஸ் ஆகும் யூடியூப்பில் ஆனால் தி கோட் பட பாடல்கள் அப்படியில்லாமல் கொஞ்சம் வியூஸ் போகவில்லை என்று சினிமா விமர்சகர்கள் கூறியிருந்தனர்.
தற்போது ஆன்லைன், சமூக வலைதளங்கள் மலிந்துவிட்ட இக்காலத்தில், யூடியூப், இன்ஸ்டா, ஃபேஸ்புக் வியூஸ் வைத்துத்தான் கணக்கிடுகிறார்கள் அப்பாடலின் வெற்றியை. இந்த நிலையில், தங்கள் ஆஸ்தான நடிகர்களின் டுவீட், ட்ரெயிலர், புரோமோ, பாடல், டீசர் இத்தனை மில்லியன் வியூஸ் என்று கணக்கை குறித்துவைத்து, அதை சக போட்டி நடிகர்களின் டீசர், டிரெயிலர், அப்டேடுகளுடன் ஒப்பீடு செய்யும் போட்டி அதிகரித்துவிட்டது.
நம்பர் வைத்து விளையாட்டு
இந்த புதிய டிரெண்டிங் என்பது சில நேரங்களின் அப்படத்தின் பாடல், படத்தின் வெற்றியைத் தீர்மானிப்பதாக கூற இருக்கிறது. இப்படி, எந்த சரியான நோக்கமும் இன்றி, ரசிகர்களை டெம்ட் ஆக்குவதற்கும், உற்சாகமூட்டுவதற்கும் மட்டும் ரூ.300 கோடி வசூல், ரூ.400 கோடி வசூல் என்று போஸ்டர் வெளியிட்டு உசுப்பேற்றி வருகின்றன. யூடியூப் வீடியோக்கள் இத்தனை லட்சம் வியூஸ் என குறிப்பிட்டு வருகின்றன.
இது எப்படி ஹிட்? யுவன் சங்கர் ராஜா ஓபன் டாக்
இந்த நிலையில், இந்த நம்பர் கேம் எதற்காக நடத்தப்படுகின்றன என்பது பற்றி யுவன் சங்கர் ராஜா ஓபானாக பேசியுள்ளார். கோபி நாத்துடனான உரையாடலின் போது இதுபற்றி யுவன் தெரிவித்துள்ளார். அதில், ’’முன்பு ஒரு படத்தின் பாடல் ரிலீஸ் என்றால் அது, ரேடியோவிலும் டீக்கடைகளிலும்தான் அதிகம் ஒலிபரப்பப்படும். அதைக் கேட்டால் அதிகம் பேரால் விரும்பி கேட்கப்பட்டால் அது ஹிட் என்று நினைப்போம். இப்போது, யூடியூப்பிலும் ரீல்ஸிலும் அதிக வியூஸ் போனதை வைத்து, ஒரு பாடல் ஹிட்டா இல்லையா என்று கூறுகிறார்கள்.
பணம் கொடுத்தால் யூடியூப்பில் எளிதில் 10 மில்லியன் வியூஸ் வாங்கலாம். ஒரு பாட்டுக்கு திட்டமிட்டு, இன்புளூயன்சர்ஸ்க்கு பணம் கொடுத்து ரீஸ்ஸ் செய்ய வைக்கிறார்கள். அவர்கள் காசு வாங்கிக் கொண்டு அப்பாடலுக்கு ரிலீஸ் செய்து புரமோட் செய்கிறார்கள். அதை அனைத்து ஸ்டீமிங்கிலும் பகிர்ந்து பணம் ஈட்டுகிறார்கள். இதில் எங்கு ஹிட் இருக்கிறது. ஒரு பாடலின் தரத்தை வைத்து மதிப்பிடாமல், பணத்திற்காக வியூஸ் ஒப்பிடப்படுகிறது ’’என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
காசுக்கான யூடியூப்பில் பாடல், டீசர், இதெல்லாம் ஹிட்டாக்கப்படுகிறது என்று யுவன் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம் யுவன் கூறுவது போல் சில ஆண்டுகளாக இப்படி நடந்து வருவதால்தான் உண்மையாக ஹிட் எப்படி என்பதை புரியாமல் ரசிகர்களும் உள்ளதாக சினிமா விமர்சகர்கள் கூறி வருகின்றனர். காலத்திற்கு ஏற்ப தொழில்நுட்பம் மாறினாலும், அதிலும் லாபம் ஈட்டும் வகையில் தரத்தை மதிப்பிடாமல், செயற்கையாக ஒன்றை ஹிட்டாக்குவதற்கு பணம் உள்ளது என்று யுவன் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.