சனிக்கிழமை, நவம்பர் 16, 2024

2023ல் வெளியான தரமான 10 படங்கள்.. ரசிகர்களால் கொண்டாடப்படும் போர் தொழில், குட் நைட்

Best tamil movies in 2023: இந்த ஆண்டு தமிழ் சினிமா இளம் மற்றும் அறிமுக  இயக்குனர்களை வரவேற்கும் சிறந்த ஆண்டாகவே அமைந்தது. ஜெயிலர், வாரிசு, துணிவு, லியோ, மாவீரன், வாத்தி என முன்னணி நட்சத்திரங்களின் பெரிய பட்ஜெட் படங்கள் பாக்ஸ் ஆபிஸ் ஹீட் அடித்தாலும் சரித்திர கதை கொண்ட பொன்னியின் செல்வன் 2 வெற்றி பட வரிசையில் கம்பீரமாகவே நின்றது.

இந்த ஆண்டு 200 படங்களுக்கு மேல்  திரையில் மற்றும் ஓடிடியில் வெளிவந்தாலும் சில படங்கள் மட்டுமே மக்களின்  மனதை ஆக்கிரமித்து நினைவில் தங்கியது. அவற்றில் சில கதை அம்சத்திலும் பாக்ஸ் ஆபிஸிலும் ஹிட் அடித்தது. இங்கு பதிவிடப்பட்ட  சிறந்த படங்கள் அனைத்தும் ஒன்று இரண்டு என்று வரிசைப்படுத்தப்படவில்லை.

ஜெயிலர்: பழங்காலத்தில் தேர்க்காலில் தன் மகனை இட்ட மனுநீதிச் சோழன் போல் துரோகியான தன்மகனை திருந்துவதற்கு சான்ஸ் கொடுத்து இயலாமல் போக கடைசியில் அவனை கொன்று தர்மத்தை நாட்டியிருந்தார் நம் தலைவர்.  பல முன்னணி கதாநாயகர்களுக்கு மாஸ் கொடுத்து ரசிகர்களை திருப்தி செய்து இருந்தால் நெல்சன்.

சித்தா: நீண்ட இடைவெளிக்கு பின் சித்தார்த் கம்பேக் கொடுத்த படம். சித்தப்பா மகள் பாசத்தை உணர்வு பூர்வமாக காட்டியதோடு  குழந்தைகளுக்கு எதிரான கொடுமை  தூய்மை பணியாளர்களை இழிவு படுத்துவது போன்றவற்றிக்கு எதிரான சமூக கருத்துக்களை உணர்வு பூர்வமாக அழுத்தமான வசனங்களோடு மக்களிடம் கொண்டு சென்று உள்ளார் s u அருண்குமார்.

Also read: 2023-ல் முதல் நாளில் அதிகம் வசூல் செய்த 5 படங்கள்.. ரஜினியின் பழைய ரெக்கார்டை உடைத்த லியோ தாஸ்

குட் நைட்:  விநாயக் சந்திரசேகர் இயக்கத்தில் மணிகண்டன் மற்றும் மிதாரகுநாத் நடித்த இப்படம் எதார்த்தமாக நடுத்தர குடும்பங்களில் நடக்கப்படும் தினசரி நிகழ்வை படம்பிடித்து காட்டியது போல் இருந்தது. தனது துணையின் குறட்டைக்கு விவாகரத்து வரை செல்லும் இக்காலத்தில் குறட்டையை மையமாக வைத்து நடுத்தர குடும்பங்களில் அடிக்கடி முடிவை மட்டும் சம்பவங்களை நகைச்சுவையாகவும் கூறி மக்களை படத்துடன் ஒன்ற வைத்திருப்பார் இயக்குனர்.

அயோத்தி: மனித நேயத்திற்கு அர்த்தம் என்ன என்று கேட்கும் உலகத்தில் நல்லவர்களும்  ஆங்காங்கே இருக்கின்றனர் என்பதை அயோத்தியின் மூலம் மந்திர மூர்த்தி வெளிப்படுத்தினார். சசிகுமார், பிரியா அஸ்ராணி நடிப்பில் வெளிவந்த இப்படம் வசூலில் பத்து மடங்கு லாபம் ஈட்டியது.  சிறப்பான கதை, வலிமையான கதாபாத்திரம், அழுத்தமான சூழல் என அனைத்தையும் ஒன்றிணைத்து வெற்றி பெற வைத்த இயக்குனரை பாராட்டலாம்.

துணிவு: வங்கியில் நடக்கும் கொள்ளை, கொள்ளைக்கு பின் உள்ள மக்களின் அறியாமை கொள்ளையடித்ததே மக்களுக்கு பகிர்தல் என கிளாசிக் கதையை காலத்திற்கு தகுந்தவாறு பல சிறப்பு அம்சங்களுடன் பட்டைய கிளப்பும் வசனங்களுடனும்  துணிவை இறக்கினார் திரையில் ஏற்றினார் ஹச் வினோத்.

வாத்தி: கல்வி வியாபாரமான கதையை கூறினார் வாத்தி.  வெங்கி அத்லூரி இயக்கத்தில் தனுஷ், சம்யுக்தா மேனன் நடித்த  இப்படம் சமூக கருத்தை வலியுறுத்தி குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி படமாக அமைந்தது. காதலிக்க கைடு இல்ல சொல்லி தரேன் வா வாத்தி என்று சிறுசு முதல் பெரிசு வரை கொண்டாடினர்.

பொன்னியின் செல்வன் 2: ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழகத்தின் தவிர்க்க முடியாத மன்னனான ராஜராஜ சோழனின் கதையை கருவாகக் கொண்ட பொன்னியின் செல்வன் வசூலில் உலக அளவில் 345 கோடியை எட்டியது. மணிரத்தினம் இயக்கத்தில் முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடிக்க ஜெயம் ரவி ராஜராஜ சோழன் கதாபாத்திரத்தை ஏற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

டாடா:  ஊதாரித்தனமாக வாழும் இளைஞன் பொறுப்புணர்வு மிக்க சிங்கிள் தந்தையாக மாறிய நிகழ்வை அழுத்தத்துடன் பதிவு செய்துள்ளார் இயக்குனர் கணேஷ் பாபு. கவின் மற்றும் அபர்ணாதாஸ் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களின்  நடித்துள்ளனர். 4 கோடியில் எடுக்கப்பட்ட இப்படம் வசூலில் 20 கோடியை தாண்டியது.

போர் தொழில்: அறிமுக இயக்குனர் விக்னேஷ் ராஜாவின் இயக்கத்தில்  சரத்குமார், அசோக் செல்வன் நிகிலா விமல்நடிப்பில் வெளிவந்த கிரைம் திரில்லர் திரைப்படம் தான் போர் தொழில். சைக்கோ கொலை வித் டிப்ரண்ட் டெக்னிக் என புதுமையான கொலை சம்பவத்தை அறிமுகப்படுத்தி இருந்தார் இயக்குனர்.  நாயகன் கொலைகாரனை நெருங்கும்போது இருக்கையில் நுனிக்கே கொண்டு சென்றிருந்தார்.

லியோ: வன்முறை வேண்டாம் என்று விலகிச் சென்ற நாயகனை ரவுடிகளை ஒடுக்க வன்முறையை கையாளுவது, கடைசி வரை இவரை பார்த்திபனா! லியோவா! என்று மக்களை எதிர்பார்க்க வைத்தது என அனைத்தையும் கச்சிதமாக நிறைவேற்றி இருந்தார் லோகேஷ் கனகராஜ். விஜய், திரிஷா, கௌதம், அர்ஜுன், சஞ்சய் தத் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்த லியோ பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்தது.

Also read: ஃபெயிலியர் ஹீரோ என சூர்யா அடி வாங்கிய 5 படங்கள்.. நடிப்பை கற்றுக்கொண்டு எடுத்த விஸ்வரூபம்..!

- Advertisement -spot_img

Trending News