
10 Tamil Horror Films : ஹாரர் படங்கள் தமிழ் சினிமாவில் சமீபகாலமாக நிறைய வெளியாகி வருகிறது. அதில் நம்மை சீட்டில் நுனிக்கு வரவைத்து அதிர்ச்சியில் ஆழ்த்திய 10 படங்களை பார்க்கலாம்.
நயன்தாராவின் திரில்லரான நடிப்பில் வெளியானது மாயா படம். தனியாக குழந்தையை வளர்க்கும் தாயாக இருக்கும் நயன்தாராவை ஒரு பேய் பின் தொடர்கிறது. இதற்கான காரணம் என்ன என்பதுதான் மாயா.
சுந்தர் சி யின் இயக்கத்தில் வெளியான படம் அரண்மனை. ஊரில் உள்ள மூதாதையர் அரண்மனையை விற்க ஒரு குடும்பம் சொந்த ஊருக்கு வருகிறது. ஆனால் அந்த அரண்மனையில் நடக்கும் அமானுஷ்ய செயல்கள் தான் இப்படத்தின் கதை.
அருள்நிதியின் நடிப்பில் வெளியான படம் தான் டிமான்டி காலனி. ஒரு குடியிருப்பில் நண்பர்கள் மாட்டிக் கொள்ளும் நிலையில் அங்கு நடக்கும் அமானுஷ்ய விஷயங்களால் ரசிகர்களை திகில் அடையச் செய்தது இந்த படம்.
லாரன்ஸின் மிரட்டலான நடிப்பில் வெளியான படம் காஞ்சனா. இதில் அரசியல்வாதியால் திருநங்கை கொலை செய்யப்படுகிறார். அதை எவ்வாறு பலி தீர்த்துக் கொள்கிறார் என்பதை வெளிக்காட்டியது காஞ்சனா.
ரசிகர்களை பயமுறுத்திய 10 பேய் படங்கள்
ராஜ்கிரண் மற்றும் லாரன்ஸ் நடிப்பில் வெளியான படம் முனி. நம்பிக்கை துரோகத்தால் கொலை செய்யப்பட்ட ஒருவரின் ஆவி ஹீரோவின் உடம்பில் போகிறது. அதன் பிறகு தன்னை ஏமாற்றியவர்களுக்கு தண்டனை வாங்கி கொடுத்ததா என்பது தான் முனி படத்தின் கதை.
அனந்தபுரத்து வீடு படத்தில் கடனை அடைப்பதற்காக தனது சொந்த ஊருக்கு சென்று அப்பாவின் வீட்டை விற்க முற்படுகிறார் ஹீரோ. ஆனால் ஹீரோவின் பெற்றோர்கள் ஆன்மா அந்த வீட்டில் இருக்கிறது. அவர்கள் இவர்களுக்கு என்ன நன்மை செய்கிறார்கள் என்பதை இப்படம் காட்டியது.
யாமிருக்க பயமே படத்தில் ஹோட்டல் நடத்தும் ஹீரோ, அங்கு வரும் ஒருவர் மர்மமாக இறந்து போய்விடுகிறார். இந்த கொலைக்கான காரணம் மற்றும் அங்கு நடக்கும் அமானுஷ்ய விசயங்கள் தான் இப்படத்தில் கதை.
மாதவனின் நடிப்பில் வெளியான படம் தான் யாவரும் நலம். ஒரு தொலைக்காட்சி தொடரில் நடக்கும் விஷயங்கள் தன்னுடைய வாழ்வில் தொடர்புடையதாக இருக்கிறது. இதனால் அடுத்தடுத்து என்ன நடக்கும் என்ற திகிலுடன் வாழ்க்கையை கடக்கும் படம் தான் யாவரும் நலம்.
பிசாசு படம் மிகவும் திரில்லர் வாய்ந்ததாக அமைந்தது. ஹீரோவின் கண்ணெதிரே ஒரு பெண்ணுக்கு விபத்து ஏற்படுகிறது. இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஹீரோ உள்ளாகிறார். பெண்ணின் விபத்துக்கான காரணத்தை கண்டுபிடித்து அவர்களை பழிவாங்குகிறாரா என்பதுதான் பிசாசு கதை.
விசில் படத்தில் ஒரே கல்லூரியில் படிக்கும் பெண்களால் ஒவ்வொரு பெண்ணிற்கு கொடுக்கப்படும் டார்ச்சரால் மனம் உடைந்து தற்கொலை செய்து கொள்கிறார். அதன் பிறகு எவ்வாறு இவர்களை பழி வாங்குகிறார் என்பது தான் விசில்.
ஆதியின் நடிப்பில் வெளியான படம் தான் ஈரம். தன்னுடைய முன்னாள் காதலி ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இறக்கிறார். அவர் எவ்வாறு இறந்தார் அங்கு நடக்கும் அடுத்தடுத்து கொலைகளுக்கான காரணத்தை கண்டுபிடிக்கும் படம் தான் ஈரம்.