Vijay: நடிகரும் தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் இன்று 50ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள் முதல் பிரபலங்கள் வரை அனைவரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் ரசிகர்களும் பல ஸ்பெஷல் வீடியோக்களை எடிட் செய்து வெளியிட்டு வருகின்றனர். இதனால் சோசியல் மீடியாவே இன்று காலையில் இருந்து பயங்கர ரணகளமாக இருக்கிறது.
இது ஒரு பக்கம் இருக்க கோட் பட குழுவினர் பர்த்டே ஸ்பெஷல் வீடியோ ஒன்றை வெளியிட்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். மேலும் இன்று மாலை படத்தின் இரண்டாம் பாடலும் வெளிவர இருக்கிறது.
இப்படி தளபதியின் பிறந்தநாள் அமர்களப்பட்டு வருகிறது. இது தவிர அட்லி, வரலட்சுமி சரத்குமார், பிரபு தேவா என பல முக்கிய பிரபலங்கள் விஜய்யுடன் எடுத்துக்கொண்ட போட்டோவை வெளியிட்டு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அமர்க்களப்படும் விஜய்யின் பிறந்தநாள்
அதில் விஜய்யின் செல்ல தம்பியான அட்லி உருகி ஒரு போஸ்ட் போட்டுள்ளார். அதில் என்னோட அண்ணன் என்னோட தளபதி நீங்க இல்லைன்னா நான் ஒண்ணுமே இல்லை என நெகிழ்ந்து போய் ட்வீட் செய்து இருக்கிறார்.
அதேபோல் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் நீண்ட பதிவு ஒன்றை போட்டு தன் வாழ்த்தை தெரிவித்துள்ளார். அதில் காலம் காலமாய் ஏமாளிகளாய் வாழும் சாமானிய மக்களின் சரித்திரத்தை மாற்ற அரசியலில் அடியெடுத்து வைக்கும் என் அன்பு தம்பி என குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே விஜய்யுடன் இவர் கூட்டணி அமைக்கப் போகிறார் என்ற பேச்சு வைரல் ஆகி வருகிறது. அதில் இந்த பிறந்தநாள் பதிவும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இப்படியாக தளபதியின் பிறந்தநாள் தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
தளபதிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறும் பிரபலங்கள்
- 50 வயதில் பல கோடி சொத்துக்கு அதிபதியாக இருக்கும் விஜய்
- பிறந்தநாள் கொண்டாட்டத்தை நிறுத்துங்க
- சீமானுடன் அடுத்த கூட்டணி போடும் சிவகார்த்திகேயன்