புதன்கிழமை, ஜனவரி 15, 2025

Raayan & Thug Life : டிசம்பர் வரை வரிசை கட்டி நிற்கும் 10 படங்கள்.. ராயன் முதல் தக் லைஃப் வரை

இந்த வருடம் தொடக்கத்தில் இருந்தே தற்போது வரை பெரிய நடிகர்களின் படங்கள் என்றால் எதுவும் வெளியாக வில்லை. ரஜினியின் லால் சலாம் வெளியானாலும் அதில் அவர் கேமியோ தோற்றத்தில் தான் நடித்திருந்தார்.

இந்த சூழலில் வருகின்ற ஜூன் தொடங்கி டிசம்பர் வரை கிட்டத்தட்ட 10 படங்கள் வெளியாக இருக்கிறது. அதன்படி ஜூன் மாதம் தனுஷின் ராயன், விக்ரமின் தங்கலான் மற்றும் பாகுபலி நடிகர் பிரபாஸின் கல்கி 2898AD ஆகிய படங்கள் வெளியாக இருக்கிறது.

அதேபோல் அடுத்ததாக ஜூலை மாதம் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 படம் வெளியாக உள்ளது. மேலும் ஆகஸ்ட் மாதம் அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 மற்றும் நானி நடிப்பில் உருவாகி உள்ள சரிபோத சனிவாரம் ஆகிய படங்கள் வெளியாகிறது.

ராயன் முதல் தக்லைஃப் வரை வெளியாக உள்ள 10 படங்கள்

செப்டம்பர் மாதம் வெங்கட் பிரபு, விஜய் கூட்டணியில் உருவான தி கோட் படம் வெளியாகிறது. அடுத்ததாக இதே மாதம் பவன் கல்யாண் நடிப்பில் OG என்ற படம் வெளியாகிறது. அக்டோபர் மாதம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் வேட்டையன் படம் வெளியாகிறது.

அதேபோல் டிசம்பர் மாதம் மணிரத்னம் மற்றும் கமல் கூட்டணியில் உருவாகி வரும் தக் லைஃப் படம் வெளியாக இருக்கிறது. இதுதவிர நிறைய படங்கள் வெளியானாலும் ரசிகர்களின் அதிக எதிர்பார்ப்பு இந்த படங்களில் மீது இருக்கிறது.

அதுவும் குறிப்பாக இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து கோலிவுட்டில் ஒரு ஹிட் படம் என்றால் எதுவும் இல்லை. இப்போது வெளியான அரண்மனை 4 படம் மட்டும் ஓரளவு நல்ல வசூலை பெற்று வருகிறது. மேலும் வருகின்ற ஜூன் மாதம் தொடங்கி பெரிய நடிகர்களின் படங்களின் வருகையால் விட்ட இடத்தை தமிழ் சினிமா பிடிக்க வாய்ப்பு இருக்கிறது.

Trending News