வாரிசு துணிவுக்கிடையே 100 கோடி வசூல் வித்தியாசம்.. கிளாஸ் விட்டு ஜெயிச்சு காட்டிய ஆட்ட நாயகன்

ஜனவரி 11-ம் தேதி பொங்கலை முன்னிட்டு விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு போன்ற இரண்டு படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆகி ரசிகர்களை குதூகலப்படுத்தியது. அதிலும் பக்கா குடும்பம் சென்டிமென்ட் படமான வாரிசு பேமிலி ஆடியன்ஸை திரையரங்குகளில் சாரை சாரையாக அணி வகுக்க செய்தது.

அதே சமயம் இளசுகள் விரும்பும் வகையில் பக்கா ஆக்சன் படமாக இருந்த துணிவு படத்திருக்கும் அமோக வரவேற்பு கிடைத்தது. இருந்தாலும் எட்டு வருடங்களுக்குப் பிறகு திரையில் மோதிக்கொள்ளும் தல தளபதி இருவரில் யார் படத்திற்கு அதிக வசூல்? யார் பாக்ஸ் ஆபிஸ் நாயகன்? என்பதை தெரிந்து கொள்ள சோசியல் மீடியாவில் அவர்களுடைய ரசிகர்கள் மல்லு கட்டுகின்றனர்.

இந்த நிலையில் இரண்டு வார முடிவில் துணிவு படத்திற்கு உலக அளவில் ரூபாய் 179 கோடி வசூல் ஆகி உள்ளது. அதே சமயம் விஜய்யின் வாரிசு படத்திற்கு ரூபாய் 278.5 கோடி வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸை மிரட்டி உள்ளது. கிட்டத்தட்ட வாரிசு படத்திற்கும் துணிவு படுத்திருக்கும் வசூல் வித்தியாசம் 100 கோடி இருக்கிறது.

இதனால் கிளாஸ் விட்டு ஜெயிச்சு காட்டி விட்டோம் என தல ரசிகர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு கெத்து காட்டிய நிலையில், இப்போது விஜய், ‘அடிச்சு மேல வந்து நிற்கிறதுல இருக்கிற கெத்தே தனி’ என்றும் தளபதி ரசிகர்கள் சோசியல் மீடியாவில் ரணகளம் செய்கின்றனர்.

இருப்பினும் துணிவு மற்றும் வாரிசு படத்திற்கு 100 கோடி வசூல் வித்தியாசம் என்பது கோலிவுட்டில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. அதுமட்டுமின்றி அஜித்தின் மற்ற படங்களை காட்டிலும் துணிவு படத்திற்கு வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு கிடைத்ததும் குறிப்பிடத்தக்கது.

இருந்தபோதிலும் மூன்றாவது வாரத்தின் தொடக்கத்தில் வாரிசு மற்றும் துணிவு போன்ற இரண்டு படங்களையும் ஒப்பிடும்போது வாரிசு படத்திற்கு தான் நல்ல வரவேற்பு கிடைத்துக் கொண்டிருக்கிறது. எனவே சீக்கிரம் வாரிசு மூன்றாவது வாரத்தில் 300 கோடியை தொட்டுவிடும். அதுமட்டுமின்றி வாரிசு தன்னுடைய வசூலை 500 கோடியில் முடிக்கும் என்றும் படக்குழு பெரும் நம்பிக்கையில் உள்ளனர்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →