தனுஷ் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவான‘ஓ.எம்:ஆபரேஷன் மோல்’படம் நவம்பர் 20ஆம் தேதி தியேட்டர்களில் வெளியானது. மம்மூட்டி,சாய் பல்லவி,ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம் வெளியான முதல் நாளிலிருந்தே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.குறிப்பாக,தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளிலும் வெளியானதால் பல்வேறு மாநிலங்களில் படத்திற்கு வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்நிலையில்,படத்தின் ஐந்து நாட்கள் பாக்ஸ் ஆபீஸ் வசூல் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.ஐந்து நாட்களில் இந்தியாவில் மட்டும் இப்படம் 61.45 கோடி நெட் வசூலும்,71.25 கோடி கிராஸ் வசூலும் பெற்றுள்ளது.வெளிநாடுகளில் 29.50 கோடி வசூலித்துள்ள நிலையில், உலகளவில் மொத்தம் .100.75 கோடியை எட்டியுள்ளது.
மாநில வாரியான ஐந்து நாள் கிராஸ் வசூல் கணக்கில் தமிழ்நாடு 29.50 கோடியுடன் முதலிடத்தில் உள்ளது. ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் இணைந்து 17.20 கோடியும்,கேரளாவில் 13.90 கோடியும், கர்நாடகாவில் 7.20 கோடியும் வசூலித்துள்ளதாகவும் மற்ற பகுதிகளில் 3.45 கோடி வசூலாகியுள்ளது.
முதல் மூன்று நாட்களில் வலுவான வசூலைப் பதிவு செய்த இப்படம், வார நாட்களில் வசூல் சரிவைச் சந்தித்துள்ளது.
இருப்பினும்,ஐந்து நாட்களிலேயே உலகளவில்100 கோடி மைல்கல்லைக் கடந்துள்ளது தனுஷ் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அடுத்தடுத்த நாட்களில் படத்தின் வசூல் எவ்வாறு அமையும் என்பதே தற்போதைய எதிர்பார்ப்பாக உள்ளது.




