செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

மூன்றே நாளில் 100 கோடி கல்லா கட்ட போகும் நயன்தாரா.. கல்யாணத்துக்கு பின்னும் விட்டுக்கொடுக்காத No.1 லேடி

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தமிழ் சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகளில் நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளார். பொதுவாக ஹீரோயின்களுக்கு திருமணம் ஆகிவிட்டால் அவர்களது மார்க்கெட் சரிந்து விடும் என்ற ஒரு பேச்சு இருந்து வருகிறது. அதனால் தான் சில நடிகைகள் திருமணத்தை தள்ளிப் போட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்ட பிறகு அவரது மார்க்கெட்டும் சரிந்து விட்டதாக கோலிவுட் வட்டாரத்தில் ஒரு பேச்சு இருந்து வந்தது. ஆனால் அது எல்லாம் பொய் என நிரூபித்து மீண்டும் நம்பர் ஒன் இடத்தை தக்க வைத்துள்ளார் நயன்தாரா.

Also Read : நயன்தாரா கன்னத்தில் அறைந்த நடிகை.. ஸ்கிரிப்டில் இல்லாமல் பழி வாங்கிய இயக்குனர்

அதாவது மலையாளத்தில் லூசிபர் என்ற படத்தை பிரித்விராஜ் இயக்கியிருந்தார். இப்படத்தின் தெலுங்கு ரீமேக்கை மோகன் ராஜா காட் ஃபாதர் என்ற பெயரில் இயக்கி உள்ளார். இப்படத்தில் சிரஞ்சீவி, சல்மான் கான், நயன்தாரா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படம் தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் வெளியாகியுள்ளது.

காட் ஃபாதர் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பு கிடைத்து வருகிறது. இப்படம் முதல் நாளில் உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 38 கோடி வசூல் செய்துள்ளது. மேலும் இரண்டாவது நாள் முடிவில் 31 கோடி வசூல் செய்து மொத்தமாக இரண்டு நாட்களில் 69 கோடி வசூல் செய்துள்ளது.

Also Read : இயக்குனர்கள் தலையில் இடியை இறக்கிய நயன்தாரா.. கல்யாணத்திற்கு பின் போடும் புது கண்டிஷன்

மிக விரைவில் 100 கோடி வசூலை சுலபமாக தொட்டுவிடும் என்று கூறப்படுகிறது. சிரஞ்சீவி நடிப்பில் கடைசியாக வெளியான ஆசாரியா படம் தோல்வியடைந்த நிலையில் காட் ஃபாதர் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று தந்துள்ளது. மேலும் இந்த படம் நயன்தாராவுக்கும் திருமணத்திற்கு பிறகு ஒரு சூப்பர் ஹிட் படமாக அமைந்துள்ளது.

அதுமட்டுமின்றி பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஆன ஷாருக்கானுக்கு ஜோடி போட்டு நயன்தாரா நடித்த வருகிறார். இவ்வாறு பெரிய பட்ஜெட் படங்களின் மூலம் தன்னுடைய நம்பர் ஒன் இடத்தை யாருக்கும் விட்டுக் கொடுக்காமல் நயன்தாரா தக்க வைத்துக் கொள்வதற்காக செயல்பட்டு வருகிறார்.

Also Read : வருங்கால குழந்தைக்காக பயிற்சி எடுக்கும் நயன்தாரா, விக்னேஷ் சிவன்.. வைரலாகும் பதிவு

Trending News