வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

100 நாட்கள் ஓடி உண்மையான வெற்றியை ருசித்த நான்கு படங்கள்.. காந்தாரா ரிஷப் ஷெட்டி சொன்ன குட் நியூஸ்

பொதுவாக இந்த காலத்தில் உள்ள சினிமா படங்கள் அதிக அளவில் திரையரங்குகளில் ஓடுவது பெரிய குதிரைக்கொம்பாகத் தான் இருக்கிறது. ஆனால் சமீபத்தில் வெளிவந்த சில படங்கள் 100 நாட்களுக்கும் மேல் திரையரங்குகளில் ஓடி அதன் வெற்றியை ருசித்தது.

திருச்சிற்றம்பலம்: மித்ரன் ஜவகர் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்தது. இதில் நடித்த அனைவருமே ஒரு யதார்த்தத்துடன் நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்கள். முக்கியமாக பாரதிராஜாவின் டைமிங்கில கிண்டல் செய்வது, பிரகாஷ்ராஜின் எமோஷனல் மற்றும் தனுஷின் வெகுளியான நடிப்பு இவை அனைத்தும் இந்த படத்திற்கு ஒரு மிகப்பெரிய ப்ளஸ் ஆக அமைந்தது. இந்தப் படம் ரசிகர்களிடமிருந்து நல்ல வரவேற்பை பெற்றது. அது மட்டுமல்லாமல் தனுஷின் வாழ்க்கையில் இந்த படம் அதிக அளவில் வசூல் படமாக மாறியது.

Also read: தனுஷின் ‘படிக்காதவன்’ படத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட வடிவேலு.. முறுக்கு மீசையுடன் கெட்டப்பு தாறுமாறு

லவ் டுடே: பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் கடந்த வருடம் வெளியாகி இளசுகளின் மனதை கொள்ளையடித்த திரைப்படம் தான் லவ் டுடே. இந்த படம் வெற்றி அடைய காரணமே இதை இயக்கிய பிரதீப் இந்த படத்தில் ஹீரோவாக நடித்தது தான். அந்த அளவுக்கு இவருடைய எதார்த்தமான நடிப்பு அனைவரும் மனதையும் கவர்ந்தது. ஒரு முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இணையாக பிரதீப் இந்தப் படத்தின் மூலம் அவர்களுக்கு பெரிய டஃப் கொடுத்திருக்கிறார். இந்தப் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றியை அடைந்தது.

விக்ரம்: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியாகி விக்ரம் படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதுவரை வெளியான தமிழ் சினிமாவில் உள்ள அனைத்து படங்களின் வசூல் சாதனைகளையும் முறியடித்தது. இந்தப் படத்தின் வெற்றியைப் போல ஒரு மாபெரும் வெற்றி படத்தை பார்த்ததில்லை. அந்த அளவுக்கு இந்தப் படம் வெற்றியின் உச்சத்திற்கு சென்றது. மேலும் இந்தப் படம் வெளியான முதல் நாளிலிருந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. விக்ரம் படம் தமிழ்நாட்டில் மட்டுமல்ல மற்ற இடங்களிலும் அதிக வசூல் சாதனையை செய்தது.

Also read: லோகேஷ்சை விஜய் படுத்தும் பாடு.. தளபதி காட்டும் ஆர்வத்தால் காஷ்மீரில் நடக்கும் கலவரம்

காந்தாரா: கடந்த வருடம் காந்தாரா திரைப்படம் கன்னட மொழியில் வெளியாகி வந்தது. ஆனாலும் இத்திரைப்படம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. இதை ரிஷப் ஷெட்டி இயக்கியும் மற்றும் நடித்தும் வெற்றியை கொடுத்தார். இந்தப் படம் தயாரிப்பதற்கு குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. ஆனால் இந்த படத்திற்கு லாபம்
எதிர்பார்க்காத அளவுக்கு கிடைத்தது.

மேலும் இந்த வெற்றியைத் தொடர்ந்து ரிஷப் ஷெட்டி ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ் சொல்லி இருக்கிறார். அதாவது காந்தார படத்துக்கு இரண்டாம் பாகம் கதை அனைத்தும் ரெடி ஆகிவிட்டதாம். அதனால் இந்த படத்திற்கு கூடிய விரைவில் சூட்டிங்கை ஆரம்பிக்கப் போகிறார். இதன் இரண்டாம் பாகத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள்.

Also read: காந்தாரா போல் அக்கட தேசத்தில் பிளாக்பஸ்டரான மாளிகப்புரம்.. ரிலீஸ் தேதியுடன் வெளிவந்த விமர்சனம்

Trending News