பழம்பெரும் நடிகையான சாவித்திரி நடிகையாக மட்டுமல்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவராக திகழ்ந்தார். சிவாஜி, எம்ஜிஆர், ஜெமினி கணேசன் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடி போட்டு நடித்திருந்தார். சாவித்திரி பழமொழிகளில் 320 க்கு மேற்பட்ட மொழிகளில் நடித்துள்ளார்.
இந்நிலையில் சாவித்திரி தன்னுடைய திரை வாழ்க்கையில் நிறைய பிரச்சனைகளை சந்தித்துள்ளார். மேலும் இவர் எல்லோரிடமும் மிகவும் எளிமையாக பழகக்கூடியவராம். அதுமட்டுமின்றி மற்றவர்களுக்கு கஷ்டம் என்றால் உதவும் மனப்பான்மை கொண்டவர் என பலர் இவரைப் பற்றி புகழ்ந்து பேட்டியில் பேசி உள்ளனர்.
Also Read :பணம் இருந்தும் உதவ முடியாமல் போன எம்ஜிஆர், சிவாஜி.. வேதனையுடன் மரணித்த சாவித்திரி
இந்நிலையில் சாவித்திரியின் வீட்டில் 100 சவரன் நகை திருட்டுப் போய் உள்ளது. அதே சமயத்தில் சாவித்திரியின் வீட்டில் வேலை பார்த்த பெண் காணாமல் போய் உள்ளார். இதனால் அந்த நகைகளை வேலை பார்த்த பெண் தான் திருடி போய் உள்ளார் என எல்லோரும் சந்தேகப்பட்டு உள்ளனர்.
மேலும் சாவித்திரியிடம் நகை திருடு போனதாக புகார் அளிக்கும்படி அவரது உறவினர்கள் கூறியுள்ளார்கள். ஆனால் சாவித்திரி போலீஸ் புகார் அளிக்க மறுத்துவிட்டாராம். அதாவது நான் இப்போது புகார் கொடுத்தால் அந்த வேலைக்கார பெண்ணை அழைத்து வந்து துன்புறுத்தி தான் உண்மையை வாங்குவார்கள்.
Also Read :அடுத்த சாவித்திரி என பெயர் வாங்கிய நடிகை.! பத்து ஆண்டுகளில் 100 படங்களா?
அந்தப் பெண் என் வீட்டில் பல வருடங்களாக வேலை பார்த்து உள்ளார். அதனால் போலீஸ் அடிப்பதை என்னால் பார்க்க முடியாது. மேலும் என்னுடைய நகையை பல பேர் ஏமாத்தி எடுத்துச் சென்றுள்ளார்கள். இது வெறும் 100 சவரன் தானே போனால் போகிறது.
இந்த விஷயத்தை அப்படியே விட்டு விடுங்கள் என சாவித்திரி கூறியுள்ளார். இப்போதே நூறு சவரன் என்பது எவ்வளவு மதிப்பு மிக்கதாக உடையது. ஆனால் அப்போதைய காலகட்டத்திலேயே பெருந்தன்மையாக தனது வீட்டில் வேலை பார்க்கும் பெண்ணுக்காக சாவித்திரி இந்த விஷயத்தை அப்படியே மன்னித்து விட்டார்.
Also Read :சாவித்திரிக்காக போனில் மிரட்டிய எம்ஜிஆர்.. கருப்பு பக்கங்களாக மாறிய வாழ்க்கை