சனிக்கிழமை, நவம்பர் 23, 2024

5 மாதத்தில் 109 படம் ரிலீஸ் ஆயிடுச்சு.. தல தப்பி கல்லா கட்டியது ரெண்டே படம் தான்

Tamil Cinema: 2023 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு ஐந்து மாதம் நிறைவடைந்த நிலையில் இதுவரை தமிழ் சினிமாவிற்கு 109 படங்கள் ரிலீஸ் ஆகியிருக்கிறது. ஆனால் இந்த படங்களில் வெறும் இரண்டே படங்கள் மட்டுமே பாக்ஸ் ஆபிஸில் எதிர்பார்த்த அளவு கலெக்ஷன் ஆக இருக்கிறது. அதை தவிர பெயர் சொல்லும் அளவுக்கு ஓடியது கவின் நடிப்பில் வெளியான டாடா.

அதன் பிறகு வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிப்பில் வெளியான விடுதலை படமும் சுமாராக ஓடியது. பின் ஜெய் பீம் பட புகழ் மணிகண்டன் நடிப்பில் வெளியான குட் நைட் திரைப்படம் ஏ சென்டரில் மட்டுமே நன்றாக ஓடியது. பி மற்றும் சி சென்டரில் சரியாக ஓடல. அதைத் தவிர மற்ற எந்த படங்களும் பெயர் சொல்லும் அளவுக்கு இல்லை. இப்படி படங்கள் அனைத்தும் படு தோல்வியை சந்திப்பதற்கு முக்கிய காரணம் திரைப்படங்களை ஒரே மாதிரி எடுப்பது தான்.

Also Read: அப்பாவோட அவஸ்தை எனக்கும் தெரியும்.. லோகேஷிடம் தளபதி விஜய் கூறிய சீக்ரெட்

குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் வெளியான வீரன் திரைப்படத்திற்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பெரிய எதிர்பார்ப்புடன் திரையரங்கிற்கு சென்றார்கள். ஆனால் படத்தை பார்த்த பிறகு தான். அந்த படம் ரொம்பவே சுமாரான படமாக போய்விட்டது.  அதன் பிறகு முத்தையா இயக்கத்தில் ஆர்யா கிராமத்து கெட்டப்பில் முதல் முதலாக நடித்திருந்த காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம் திரைப்படமும் மிக மோசமான விமர்சனத்தை பெற்றது.

முத்தையா இயக்கத்தில் வெளியான எல்லா படங்களும் ஒரே டெம்ப்ளேட்டில் எடுக்கப்படுவது போன்றே ஆடியன்ஸுக்கு தோன்றுகிறது. அந்த அளவிற்கு ஒரே மாதிரியான காட்சிகளை படத்தில் மறுபடி மறுபடியும் காண்பிப்பது தான் எரிச்சலடைய வைக்கிறது.  ஆனால் இதே முத்தையா இயக்கிய படங்களின் மூலம் தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் அனைவரும் நல்லாவே சம்பாதித்தார்கள்.

Also Read: மாஸ்டர் மாமாவை கண்டுகொள்ளாத விஜய்.. பதிலுக்கு தளபதிக்கு வந்த தலைவலி

அவர் இதற்கு முன்பு எடுத்த கொம்பன், குட்டி புலி, புலிக்குத்தி பாண்டி, விருமன் போன்ற படங்களில் இடம்பெற்ற அதே பேக்ரவுண்ட், அதே காட்சி, அதே ஹீரோ ஹீரோயின் கெட்டப் என ஒரே லுக்கில் இருந்ததால்தான் காதர் பாட்ஷா படு தோல்வியை சந்தித்தது. இவ்வாறு கடந்த ஜூன் இரண்டாம் தேதி வரை 109 படங்கள் இந்த வருடத்தின் முதல் ஐந்து மாதத்தில் ரிலீஸ் ஆகி இருக்கிறது. ஆனால் பொங்கலுக்கு ரிலீசான விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு படங்கள்தான் தல தப்பி பாக்ஸ் ஆபிஸில் கல்லா கட்டிய படங்களாகும்.

அதை தவிர மற்ற படங்கள் எதுவும் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு பெரிதாக ஓடவில்லை. இதே நிலைமை நீடித்தால் நிச்சயம் மற்ற மொழி படங்கள்தான் கோலிவுட்டிலும் ஆதிக்கம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டு விடும். ஆகையால் இயக்குனர்கள் தங்களது படங்களில் வித்தியாசம் காட்டினால் மட்டுமே இந்த நிலைமையை மாற்ற முடியும்.

Also Read: விஜய் தவற விட்டு ஃபீல் பண்ணிய 5 படங்கள்.. விக்ரமின் வெற்றி படத்தை ரிஜெக்ட் செய்த தளபதி

- Advertisement -spot_img

Trending News