வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

அடுத்த வருடம் ரிலீஸ் ஆக உள்ள மாஸ் ஹீரோக்களின் 13 படங்கள்.. சூப்பர் ஸ்டாருடன் மோதும் தனுஷ்

2024 Upcoming Movies: இன்னும் ஒரு மாதத்தில் இந்த வருடம் நிறைவடையப் போவதால் அடுத்த வருடம் 2024 ஆம் ஆண்டில் பெரிய தலைகளின் 13 படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ் ஆகிறது. இதில் சூப்பர் ஸ்டார் மற்றும் அவருடைய மருமகன் தனுஷும் நேருக்கு நேர் மோதிக்கொள்ளப் போகின்றனர்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சூப்பர் ஸ்டாரின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய லால் சலாம் படம் மற்றும் சிவகார்த்திகேயனின் அயலான் படமும் ரிலீஸ் ஆகிறது. ஏகப்பட்ட முறை அயலான் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்து ஒரு வழியாக பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது. மேலும் குடியரசு தினமான ஜனவரி 26 ஆம் தேதி சியான் விக்ரம் நடிப்பில் பா, ரஞ்சித் இயக்கியிருக்கும் தங்கலான் படம் ரிலீஸ் ஆகிறது.

சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தை கலக்கியது. அதை தொடர்ந்து உலக நாயகனின் நடிப்பில் சங்கர் இயக்கி இருக்கும் இந்தியன் 2 படம் அடுத்த வருடம் ஏப்ரல் 12ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. அதன் தொடர்ச்சியாக கோடை விடுமுறையை முன்னிட்டு டாப் ஹீரோக்களின் நான்கு படங்கள் வெளியாகிறது. இதில் தான் சூப்பர் ஸ்டார் தன்னுடைய மருமகன் தனுஷ் உடன் நேருக்கு நேர் மோதுகிறார். சம்மரில் தனுஷின் ஐம்பதாவது படமான ‘D50’ ரிலீஸ் ஆகிறது.

Also read: விஜய் பட சைக்கோ நடிகருக்கு வந்த சிக்கல்.. அதிசய நோயினால் திக்குமுக்காடி அதிர்ச்சியில் உறைந்த படக்குழு

அப்போதுதான் சூப்பர் ஸ்டாரின் தலைவர் 170 படமும் வெளியாகிறது. இந்த இரண்டு படங்களும் திரையில் நேருக்கு நேர் மோதிக் கொள்கிறது. அதேபோல் சூர்யாவின் அசுரத்தனமான நடிப்பில் விறுவிறுப்பாக தயாராகும் கங்குவா படமும் கோடை விடுமுறையை முன்னிட்டு ஏப்ரல் அல்லது மே மாதங்களில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

மேலும் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் வெற்றிமாறன் இயக்கியிருக்கும் விடுதலை படத்தின் முதல் பாகத்தை தொடர்ந்து இரண்டாம் பாகம் அடுத்த வருட சம்மருக்கு தான் வெளியாகிறது. அதை போல் 2024 ஆம் ஆண்டு இரண்டாம் பாதியில் மட்டும் நான்கு படங்கள் அடுத்தடுத்து வெளியாகும். அதில் தல, தளபதி இருவரும் மல்லுக்கட்ட போகின்றனர், அஜித்தின் விடாமுயற்சி மற்றும் விஜய்யின் தளபதி 68 படங்கள் அடுத்த வருட இரண்டாம் பாதியில் வெளியாகும்.

அதேபோல் சிவகார்த்திகேயனின் 21வது படமான ‘SK21’ படமும் 2024 ஆம் ஆண்டு இரண்டாம் பகுதியில் வெளியாக உள்ளது. அதை தொடர்ந்து ‘சியான் 62’ படத்தையும் 2024ல் செகண்ட் ஆப்-இல் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். இவை மட்டுமல்ல இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பின் போது அதிரடியாக இந்தியன் 3யையும் ரிலீஸ் செய்ய முடிவெடுத்தனர்.

இதனால் அடுத்த வருட தீபாவளிக்கு இந்தியன் 3 படத்தை ரிலீஸ் செய்ய பட குழு முடிவு எடுத்துள்ளது. இந்த 13 படங்களில் எந்த படங்களும் சினிமா ரசிகர்களின் லிஸ்டில் இருந்து வெளியேறாது. அப்படிப்பட்ட இந்த 13 படங்களும் 2024ல் அடுத்தடுத்து வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் வசூலை வாரி குவிக்கப் போகிறது. இப்போதிலிருந்தே ரசிகர்களும் திரையரங்கில் அலப்பறையை கூட்ட அதற்கு ஆயத்தமாகி கொண்டு இருக்கின்றனர்.

Also read: லோகேஷுக்கு அடுத்து துண்டு போட்டு இடத்தை பிடித்த இயக்குனர்.. சர்ப்ரைஸ் கொடுக்கும் தலைவர் 172

Trending News