Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

2024 முதல் வாரம் ஓடிடியில் வெளியாகும் 13 படங்கள்.. மீண்டும் வசூலை குவிக்க வரும் ஜோதிகா

2024 முதல் வாரம் ஓடிடியில் வெளியாகும் 13 படங்கள்.. மீண்டும் வசூலை குவிக்க வரும் ஜோதிகா

This Week OTT Release Movies: இப்போது திரையரங்கை காட்டிலும் ஓடிடியில் தான் அதிக படங்கள் வெளியாகிறது. அந்த வகையில் இந்த 2024 ஆம் ஆண்டு தொடக்கத்திலேயே ஜனவரி 5ஆம் தேதி கிட்டத்தட்ட 13 படங்கள் ஓடிடியில் வெளியாகிறது. […]

This Week OTT Release Movies: இப்போது திரையரங்கை காட்டிலும் ஓடிடியில் தான் அதிக படங்கள் வெளியாகிறது. அந்த வகையில் இந்த 2024 ஆம் ஆண்டு தொடக்கத்திலேயே ஜனவரி 5ஆம் தேதி கிட்டத்தட்ட 13 படங்கள் ஓடிடியில் வெளியாகிறது. அந்த படங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் இப்போது பார்க்கலாம்.

அந்த வகையில் அறிமுக இயக்குனர் செல்வின் ராஜ் சேவியர் இயக்கத்தில் காமெடி நடிகர் சதீஷ் ஹீரோவாக நடித்து சமீபத்தில் வெளியான கான்ஜூரிங் கண்ணப்பன் படம் நெட்பிளிக்ஸில் வெளியாகிறது. இதை அடுத்து தமிழில் லில்லி ராணி என்ற படம் ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

இதையடுத்து மலையாளத்தில் மம்முட்டி மற்றும் ஜோதிகா நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பு பெற்ற காதல் தி கோர் படம் அமேசான் பிரைமில் வெளியாகிறது. மேலும் ஆங்கிலத்தில் குட் கிரிப், தி பிரதர்ஸ் சன் ஆகிய படங்கள் நெட்பிக்ஸில் வெளியாகிறது. மேலும் ஸ்பானிஷ் மொழியில் சொசைட்டி ஆப் சோ என்ற படம் வெளியாகிறது.

மேலும் மலையாள மொழியில் வெளியான பெரிலோர் ப்ரீமியர் லீக் டிஸ்னி ஹாட் ஸ்டாரில் ஜனவரி 5ஆம் ரிலீஸ் ஆகிறது. மேலும் நெட்பிளிக்ஸில் மேன் ஆன் தி ரன், சொசைட்டி ஆப் தி ஸ்னோ ஆகிய படங்கள் வெளியாகிறது. மேலும் தெலுங்கில் காலிங் சாகசர படம் அமேசான் பிரைமில் வெளியாகிறது.

இதையடுத்து கங்கனா ரனாவத் நடிப்பில் உருவாகி உள்ள தேஜாஸ் படம் ஜீ 5 ஓடிடியில் ஜனவரி 5ஆம் தேதி வெளியாகிறது. இது தவிர மற்ற மொழிகளிலும் சில படங்கள் வெளியாகிறது. இவ்வாறு 2024 ஆம் ஆண்டு முதல் வார விடுமுறையை ரசிகர்கள் கொண்டாடும் விதமாக ஓடிடியில் படங்கள் அதிகம் வெளியாக இருக்கிறது.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.