Ethirneechal Serial: எந்த ஒரு நல்ல காரியத்தையும் தள்ளி போடக்கூடாது. சூட்டோட சூட்டாக செய்து முடித்தால் வெற்றி நிச்சயம் என்பதற்கு ஏற்ப புது அஸ்திவாரத்தை கையில் எடுக்கப் போகிறார் எதிர்நீச்சல் இயக்குனர் திருச்செல்வம். அதாவது இவருடைய நாடகத்தை பொருத்தவரை கிட்டத்தட்ட 1000 எபிசோடுக்கு மேலாவது கொண்டு போய் வெற்றி கொடுப்பதுதான்.
அப்படித்தான் எதிர்நீச்சல் என்ற நாடகத்தின் மூலம் மக்களின் பேராதரவை பெற்றார். ஆனால் எதிர்பாராத பல விஷயங்களால் சீரியல் சொதப்பிவிட்டு மக்கள் வெறுக்கும் படியாக அமைந்து விட்டது. இதனால் சன் டிவி சேனலிடம் இருந்து வந்த நெருக்கடியால் இறுதிக்கட்டத்தை எடுத்துவிட்டார்.
எதிர்நீச்சல் பயணத்தை தொடர போகும் ஜீவானந்தம்
ஆனால் அவசர அவசரமாக எடுத்ததால் என்னமோ முடிவும் சொதப்பிவிட்டது என்று சொல்லும் அளவிற்கு திருப்தி அளிக்காமல் போய்விட்டது. இதனால் இதுவரை எடுத்து வைத்த பெயர் மொத்தமும் காலியாகி விடும் என்ற பயம் அவருக்கு மிகவும் கவலையை கொடுத்திருக்கிறது.
இந்த சூழ்நிலையில் இவருடைய மகளுக்கு வைத்த கல்யாண விசேஷத்தில் ரிசப்ஷனுக்கு எதிர்நீச்சல் சீரியல் உள்ள அனைத்து ஆர்டிஸ்ட்களையும் கூப்பிட்டு கோலாகலமாக நடத்தி முடித்திருக்கிறார். ஆனாலும் அவருடைய முகத்தில் சந்தோஷம் என்பது கம்மியாகத்தான் இருக்கிறது காரணம் பார்த்து பார்த்து செதுக்கி கொண்டு வந்த எதிர்நீச்சல் சீரியல் இப்படி கைவிட்டுப் போய்விட்டதே என்பதுதான்.
அதனால் கூடிய விரைவில் மக்களை திருப்தி படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் அடுத்த கட்ட அத்தியாயமாக கொண்டு வரப் போகிறார். ஏற்கனவே எதிர்நீச்சல் சீரியலில் கதை இப்படித்தான் கொண்டு போக வேண்டும் என்று 1500 எபிசோடு வரை கதையை எழுதி வைத்திருக்கிறார்.
அதனால் அதில் சில மாற்றங்களை ஏற்படுத்தி எதிர்நீச்சல் சீரியலின் ரசிகர்களுக்கு ஒரு பேரானந்தத்தை கொடுக்கப் போகிறார். முக்கியமாக ரசிகர்கள் ஆசைப்பட்ட சக்தியை முக்கிய கதாபாத்திரத்தில் வைக்கும் விதமாக அவருக்கு என்று தனிப்பட்ட கதையை ஆரம்பிக்கப் போகிறார். இதில் இவருக்கு ஜோடியாக ஜனனி வருவாரா அல்லது வேறு ஒருவராய் என்பது இப்பொழுது வரை தெரியவில்லை.
ஆனால் இனி எடுக்கிற ஒவ்வொரு முயற்சியும் மக்களை திருப்தி படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலும் தன்னுடைய பயணத்தில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவும் பார்த்து பார்த்து செய்யப் போகிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை கூடிய விரைவில் வெளியிடுவார். ஆனால் சன் டிவியில் தொடர்ந்து பயணிப்பாரா அல்லது வேற ஒரு சேனலுக்கு போவாரா என்பதுதான் அவர் எடுக்கப் போகும் முக்கியமான முடிவாக இருக்கும்.