வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

19 வயது தங்கல் பட நடிகை திடீர் மரணம்.. காரணத்தைக் கேட்டு பதறும் திரையுலகம்

Dangal Movie Actress Passed Away: அமீர்கான் நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான தங்கல் மிகப்பெரிய அளவில் வெற்றி வாகை சூடியது. அப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த 19 வயது நடிகை தற்போது உயிரிழந்திருப்பது கடும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது.

மல்யுத்த விளையாட்டை மையப்படுத்தி வெளிவந்த இப்படம் கீதா போகத் மற்றும் பபிதா போகத் ஆகியோரின் வாழ்க்கை வரலாறு பற்றியதாகும். அதில் கீதா போகத்தாக பாத்திமா சனா ஷேக் நடித்திருப்பார். பபிதா போகத்தாக சானியா மல்கோத்ரா நடித்திருப்பார்.

அதில் சானியாவின் இளவயது கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் தான் சுஹானி பட்னாகர். ஏகப்பட்ட ஹிந்தி சீரியல்கள் மற்றும் படங்களில் நடித்து வந்த இவருக்கு கடந்த வருடம் ஒரு விபத்து ஏற்பட்டது. அதில் அவருக்கு கால் முறிவு ஏற்பட்டு சிகிச்சையும் நடந்தது.

Also read: நாட்டுக்காக வீர மரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜன்.. ராயல் சல்யூட் அடிக்கும் அமரன் சிவகார்த்திகேயன்

ஆனால் விபத்தினால் ஏற்பட்ட பக்க விளைவுகளின் காரணமாக சுஹானி உடலில் பல பிரச்சனைகள் ஏற்பட்டிருக்கிறது. அதை தொடர்ந்து அவருக்கு சிகிச்சையும் நடந்து வந்திருக்கிறது. ஆனால் கடந்த சில நாட்களாகவே அவருடைய உடல்நலம் பாதிப்படைந்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை கொடுக்கப்பட்டிருக்கிறது.

சுஹானி பட்னாகர்

suhani-batnagar
suhani-batnagar

இருப்பினும் அது பலனளிக்காத நிலையில் 19 வயதே ஆன சுஹானி இன்று உயிர் நீத்துள்ளார். இவருடைய மறைவு பாலிவுட் திரையுலகை மட்டுமல்லாமல் ரசிகர்களையும் கடும் அதிர்வுக்கு ஆளாக்கி இருக்கிறது. மிகப்பெரும் நட்சத்திரமாக வரவேண்டிய இவர் அனைவரையும் மீளா துயரில் ஆழ்த்தி சென்று விட்டார். அவருடைய இழப்பை ஏற்க முடியாமல் தவிக்கும் குடும்பத்தினருக்கு ஆண்டவன் தான் தைரியத்தை கொடுக்க வேண்டும்.

Also read: 2023ல் பெரும் துயரை தந்த நான்கு பேரின் மரணம்.. அதிகாலையில் பதற வைத்த கேப்டனின் மறைவு செய்தி

Trending News