செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

அப்பா, மகனுடன் ஜோடி போட்ட 2 நடிகைகள்.. 24 வயது வித்தியாசத்தில் நடித்த அம்பிகா

தென்னிந்திய சினிமாவில் 60, 70 கால கட்டங்களில் இணைபிரியா சகோதரிகளான இருவர், தமிழ் சினிமாவை ஆட்டிப்படைத்து அப்பா மகன் என இரண்டு பேருடனும் ஜோடி போட்டு பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளனர். இன்றைய தலைமுறையின் நடிகர்களுடன் கூட குணச்சித்திர கதாபாத்திரங்களின் மூலம் இன்றளவும் திரைத்துறையில் ஜொலித்துக் கொண்டுதான் இருக்கின்றனர்.

கோலிவுட்டின் ஜாம்பவானாக பார்க்கப்படும் சிவாஜி கணேசன் மற்றும் அவரது மகன் பிரபு ஆகிய இருவருடனும்மே அம்பிகா மற்றும் ராதா ஜோடி போட்டு நடித்துள்ளனர். படத்தில் இவர்களின் ஜோடிப் பொருத்தமானது கச்சிதமாக பொருந்தக்கூடிய விதத்தில் அமைந்திருக்கும்.

Also Read: எம்ஜிஆரின் கல்லாபெட்டிய நிரப்பிய 5 படங்கள்.. சிவாஜியிடம் இருந்து திரும்பி ஓடி வந்த தயாரிப்பாளர்கள்

1985 ஆம் ஆண்டு இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், ராதா, வடிவக்கரசி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் ஆகும். இதில் சிவாஜி கணேசனுக்கு ஜோடியாக ராதா நடித்ததன் மூலம் இன்றளவும் முதல் மரியாதை திரைப்படத்தில் ஒரு காதல் காவியத்திற்கு உதாரணமாக தமிழ் சினிமாவில் நிலைத்து நிற்கிறார்.

சினிமா துறையில் சிவாஜி கணேசன் உடன் இணைந்து நடித்ததனை தொடர்ந்து அவரது மகன் பிரபுவுடன் ஆனந்த், அண்ணா நகர் முதல் தெரு போன்ற படங்களிலும், அதிலும் 1985 ஆம் ஆண்டு இயக்குனர் பாரதி வாசு இயக்கத்தில் வெளியான நீதியின் நிழல் படத்தில் சிவாஜி கணேசன் மற்றும் பிரபு ஆகிய இருவருடனும்மே சேர்ந்து நடித்துள்ளார்.

Also Read: கமல், விக்ரம், சிவாஜி அளவுக்கு தாக்குப் பிடிப்பாரா சூர்யா? வெறித்தனமாக இறங்கும் சிவாவின் படக்குழு

இவரைத் தொடர்ந்து அம்பிகாவும் சிவாஜி உடன் வாழ்க்கை என்னும் படத்தின் மூலம் ஜோடி சேர்ந்துள்ளார். இப்படம் 1984 ஆம் ஆண்டு இயக்குனர் சி.வி ராஜேந்திரன் இயக்கத்திலும் இளையராஜா இசையமைப்பிலும் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது.

இருந்தாலும் கூட வாழ்க்கை படத்தில் சிவாஜி கணேசன் உடன் ஜோடி போட்டு இருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏனென்றால் வாழ்க்கை படத்தில் 56 வயது உடைய சிவாஜி கணேசன் உடன் 22 வயதே ஆன அம்பிகா இணைந்து நடித்ததற்கு பல்வேறு சர்ச்சைகள் கிளம்பியது.

Also Read: எம்ஜிஆர், சிவாஜிக்கு முன்பே சினிமாவை ஆட்சி செய்த 2 ஜாம்பவான்கள்.. 70-களில் கலக்கிய சூப்பர் ஹீரோஸ்

அம்பிகா சிவாஜி உடன் மட்டுமல்லாமல் அவரது மகன் பிரபுவுடன் தலைமகன் மற்றும் வெள்ளை ரோஜா போன்ற படங்களில் பிரபுவுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார். இவ்வாறு அப்பா மகன் என இரு நடிகர்களுடனும்மே ராதா மற்றும் அம்பிகா இருவரும் நடித்துள்ளனர். அதிலும் 24 வித்யாசத்தில் சிவாஜி கணேசனுக்கு ஜோடியாக அம்பிகா நடித்திருப்பது அன்றைய சினிமாவில் பேச்சு பொருளாக மாறியது.

Trending News