வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

கடவுள் நம்பிக்கை இல்லாவிட்டாலும் இறந்த பின் கிடைத்த 2 ஆசீர்வாதம்.. விஜயகாந்த் ஒரு அதிசய பிறவி

Vijayakanth was born a miracle: ஒருவர் இறந்த பிறகு மனைவி அழுதா நல்ல கணவன், குழந்தைகள் அழுதால் நல்ல தகப்பன், ஊரே அழுதால் நல்ல தலைவன், ஆனா உங்களுக்காக நாடே அழுவுதையா கருப்பு சிங்கம் கேப்டனின் இறப்பு தமிழ்நாட்டு மக்கள் அனைவரையும் வாட்டி விட்டது. அத்துடன் இவரை கடைசியாக ஒரு முறையாவது பார்த்து விட வேண்டும் என்று பல இடங்களில் இருந்து கடல் போல் திரண்டு வந்து அஞ்சலி செலுத்திட்டு போனார்கள்.

ஆனால் இருக்கும்போது யாருமே கண்டுகொள்ளவில்லை என்பது தான் மிகப்பெரிய வருத்தமாகவும் குற்ற உணர்ச்சியாகவும் இருக்கிறது. படங்கள் மூலம் நல்ல கருத்துக்களை கொடுத்ததுடன் அரசியலிலும் ஜெயித்து தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு விடிவு காலத்தை ஏற்படுத்த வேண்டும் என்று பல வழிகளில் போராடி வந்தார். அப்படிப்பட்ட இவருக்கு கடைசியாக கிடைத்தது அவமானம் தான்.

ஆனாலும் எதையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற ஒரு எண்ணத்தில் முழுமையாக இறங்கினார். அத்துடன் இவருடைய முக்கியமான நோக்கமே கோயிலில் இருக்கும் தெய்வங்களுக்கு செய்வதை விட ஏழை மக்களுக்கு என்ன தேவையோ அதை முடிந்தவரை செய்ய வேண்டும் என்ற குறிக்கோளுடன் வாழ்ந்தவர்.

Also read: கேப்டனின் இறுதி அஞ்சலிக்கு செல்லாத அஜித்.. இப்ப சென்னைக்கு வர இதுதான் காரணம், புகைப்படம்

அதனால் கடவுள் பக்தி இல்லாமல் இல்லை, அதனுடைய நம்பிக்கை எப்படி காட்ட வேண்டும் என்று மக்களின் கண்ணீரைத் துடைக்கும் ஆத்ம பாண்டவர் ஆக உதவி செய்து இருக்கிறார். அதனால் தான் இவருடைய இறுதி ஊர்வலத்தில் விஜயகாந்தின் உடலை சுற்றி கருடபாகவான் வானத்தில் வட்டமிட்டு சொர்க்கத்துக்கு வா என்று ஆசீர்வாதம் கொடுத்தது போல் ஒரு சம்பவத்தை நிகழ்த்தி காட்டி பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைத்து விட்டது.

அடுத்ததாக இன்னொரு அதிசயமும் நடந்திருக்கிறது என்னவென்றால், விஜயகாந்தின் சமாதிக்கு அருகே இருந்த இவருடைய ஃபோட்டோ மீது ஒரு பாம்பு வந்து ஏறி படம் எடுத்துவிட்டு இறங்கி இருக்கிறது. இந்த காட்சியை பார்க்கும் பொழுது சிவன் கழுத்தில் இருந்து பாம்பு ஆசீர்வதித்ததாக கேப்டனுக்கு இறைவன் ஆசிர்வாதம் கொடுத்திருக்கிறார்.

இப்படி விஜயகாந்தின் மறைவுக்குப் பிறகு இறைவனிடம் இருந்து 2 ஆசீர்வாதத்தை பெற்ற கேப்டன் உண்மையிலேயே ஒரு அதிசய பிறவி தான். அப்படிப்பட்ட இவருடைய சகாப்தம் முடிந்து விட்டது என்பதை நினைக்கும் பொழுது ரொம்பவே வருத்தமாக இருக்கிறது. இவரைப் பற்றி சொல்ல வார்த்தைகள் எதுவும் இல்லை மனம் முழுவதும் வேதனை தான் இருக்கிறது. நிஜத்தில் நடிக்கத் தெரியாத மாமனிதர் விஜயகாந்த்.

அதிசய பிறவியாகவும் மாறிய கேப்டன் விஜயகாந்த்

vijayakanth
vijayakanth

Also read: விஜயகாந்த் பாணியை பின்பற்ற போகும் அருண் விஜய்.. கேப்டன் சமாதியில் எடுத்த தில்லானா சபதம்

Trending News