2 Bollywood Actors Who Didn’t Attend Thalaiar 171 Promo Shoots: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் ஜெயிலரின் வெற்றிக்குப் பின் தன்னை புதுப்பித்துள்ளார் என்று சொல்லலாம்.
தரமான திரைக் கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வரும் தலைவர் தற்போது ஜெய் பீம் புகழ் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இம்மாத இறுதியோடு படப்பிடிப்பு நிறைவடைவதை ஒட்டி விரைவில் தீபாவளிக்கு திரைக்கு வரும் என எதிர்பார்க்கலாம். இதனைத் தொடர்ந்து ரஜினி, தலைவர் 171க்கு வெற்றி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் கூட்டணி சேர்ந்து உள்ளார்.
சமீபத்தில் தலைவர் 171 படத்தின் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றது.
இதனை அடுத்து வரும் 22 ஆம் தேதி அன்று படத்திற்கான டைட்டில் ப்ரோமோவை வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளது படக்குழு.
ப்ரோமோ கான சூட்டிங் சன் பிக்சர்ஸ் அலுவலகத்தில் நடைபெற்று உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
லோகேஷ் கனகராஜ் படம் மட்டுமல்ல பிரமோவிலும் பல சங்கதிகளை உள் ஒளித்து வைத்திருப்பார்.
லெஜண்டரி ஆக்டர் உலக நாயகன் கமலஹாசன் அவர்கள் விக்ரம் பிரமோவின் போது “ஆரம்பிக்கலாமா” என்று தெறிக்க விட்டார். அந்த ஒற்றை வார்த்தைக்குள் ஓராயிரம் வெற்றிகளை குவித்து வைத்திருந்தார் இயக்குனர்.
அதேபோன்று தலைவர் 171 இல் தரமான சம்பவம் இருக்கும் என்று நிச்சயமாக நம்பலாம்.
ஏற்கனவே லோகேஷ் ரசிகர்களிடம் ரஜினியை இதுவரை பார்த்திராத முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் எதிர்பார்க்கலாம் என்று சூசகமாக தெரிவித்து இருந்தார்.
பிரமோ சூட்டிங் இல் கலந்து கொள்ள இருந்த 2 பாலிவுட் நடிகர்கள்
Thalaivar 171 இல் ஹீரோ, வில்லன் என இரு வேறு கதாபாத்திரங்களில் தோன்ற உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற பிரமோவிற்கான சூட்டிங்கில் பாலிவுட் சூப்பர் ஸ்டார்கள் ஷாருக்கான் மற்றும் ரன்வீர் சிங் பங்கேற்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.
இவர்கள் இருவருமே மற்ற படத்திற்கான ஷூட்டிங்கில் பிசியாக இருப்பதாக கூறிக்கொண்டு நைசாக நழுவி கழண்டு கொண்டனர்.
ரஜினியை டானாக முன்னிலைப்படுத்துவதால் தனது கேரக்டர் சிறிதளவே பேசப்படும் என்று ரன்வீர் சிங் வருத்தப்பட்டதாக வதந்திகள் பரவி வருகிறது
பிரமோ சூட்டிங் பார்த்த அனிமல் பட இயக்குனர் சந்தீப் ரெட்டி பிரமோவிலேயே தலைவரை வைத்து தரமான சம்பவம் செய்துள்ளார் லோகேஷ்.
பிரமோ பார்த்ததிலேயே படத்தை பார்க்கும் ஆவல் ஏற்பட்டு உள்ளது என்று வலைதளங்களில் பதிவிட்டு ரசிகர்களின் ஹைப்பை எகிற வைத்துள்ளார்.