வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

சினிமாவை கலக்கி ஓய்ந்து போன 2 பிரபலங்கள்.. விஜயகாந்துக்கு கொடுத்த நான்கு த்ரில்லர் ஹிட்ஸ்

தமிழ் சினிமாவில் விஜயகாந்தின் வலது கரமாக இருந்து தோள் கொடுத்த தயாரிப்பாளர் ஒருவர் இன்று சினிமாவை விட்டு விலகி இருக்கிறார். ஆரம்பத்தில் விஜயகாந்த் உடன் ஒன்றாக பயிற்சி பள்ளியில் பயின்றவர் தான் அந்த பிரபலம். இப்படியாக ஆபாவாணன், விஜயகாந்த்க்கு நான்கு சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார். எல்லாமே ஓரளவு சஸ்பென்ஸ் திரில்லர் ஹிட் படங்களாகும். அவை என்ன படங்கள் என்பதை இங்கு காணலாம்.

ஊமை விழிகள்: இயக்குனர் அரவிந்த் ராஜ் இயக்கத்தில் விஜயகாந்த் நடிப்பில் 1986 ஆம் ஆண்டு வெளியான மர்மம் நிறைந்த திகில் திரைப்படம் ஆகும். மேலும் இப்படத்தை ஆபாவாணன் தயாரித்துள்ளார். இதில் மர்மமான முறையில் காணாமல் போகும் இளம் பெண்களை கண்டுபிடிக்கும், காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் விஜயகாந்த் நடித்திருப்பார்.

Also Read: எந்த ஒரு ஹீரோவும் செய்யாததை செய்து காட்டிய விஜயகாந்த்.. தனுஷ் அக்காவிற்கு வாங்கி கொடுத்த வாய்ப்பு

செந்தூரப்பூவே: இயக்குனர் பி ஆர் தேவராஜ் இயக்கத்தில் 1988 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் செந்தூரப்பூவே. இதில் விஜயகாந்த், ராம்கி, நிரோஷா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தொடர்ந்து நடக்கும் மர்மமான கொலைகளை மையமாக வைத்து இந்த படமானது அமைந்துள்ளது. அதிலும் இப்படத்திலும் விஜயகாந்த் கேப்டன் சௌந்தரபாண்டியன் ஆக மாஸ் காட்டியிருப்பார்.

காவியத்தலைவன்: இயக்குனர் கே எஸ் கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் 1992 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஆகும். இதில் விஜயகாந்த், பானுப்ரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அதிலும் பானுப்பிரியா இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். விஜயகாந்த் மணிகண்டன் எனும் கதாபாத்திரத்தில் தனது அசாத்திய திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.

Also Read: விஜயகாந்த் போட்டியாக அர்ஜுன் கல்லா கட்டிய 6 போலீஸ் படங்கள்.. மார்க்கெட் போனதால் சொந்தமாக தயாரித்த படம்

உழவன் மகன்: இயக்குனர் அரவிந்த் ராஜ் இயக்கத்தில் 1987 ஆம் ஆண்டு விஜயகாந்த் இரட்டை வேடங்களில் நடித்து வெளியான திரைப்படம் ஆகும். இதில் விஜயகாந்த் உடன் ராதிகா, ராதா, ராதா ரவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு மனோஜ் ஞான் இசையமைத்துள்ளார். அதிலும் குடும்பத்தில் எதிரிகளின் மூலம் ஏற்படும் பிரச்சனைகளை திறம்பட எதிர்த்து மாஸ் காட்டி இருப்பார்.

இந்த நான்கு படங்களுமே விஜயகாந்த்க்கு ஓரளவு சஸ்பென்ஸ் கலந்த திரில்லர் படமாகவே அமைந்தது. அதிலும் ஊமை விழிகள் என்ற படத்தில் மர்மமான முறையில், காணாமல் போகும் இளம் பெண்களை துணிச்சலாக கண்டுபிடிக்கும் போலீஸ் அதிகாரியாக நடித்து மிரட்டி இருப்பார்.

Also Read: மனோபாலா கொடுத்த தரமான 5 படங்கள்.. விஜயகாந்துக்கு சூப்பர் ஹிட் கொடுத்த இரண்டு படங்கள்

Trending News