Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

சூர்யாவை பிடித்து ஆட்டும் ஏழரை சனி.. அடுத்தடுத்த கைவிடும் பிரபல இயக்குனர்கள்

சூர்யாவை பிடித்து ஆட்டும் ஏழரை சனி.. அடுத்தடுத்த கைவிடும் பிரபல இயக்குனர்கள்

Suriya : சூர்யாவுக்கு ஏழரை சனி பிடித்து ஆட்டுவது போல் அடுத்தடுத்து தோல்வி படங்களை கொடுத்து வருகிறார். கங்குவா மோசமான தோல்வி அடைந்தது. அடுத்ததாக ரெட்ரோவும் பெரிய அளவில் வசூலை கொடுக்கவில்லை. இப்போது ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகும் […]

Suriya : சூர்யாவுக்கு ஏழரை சனி பிடித்து ஆட்டுவது போல் அடுத்தடுத்து தோல்வி படங்களை கொடுத்து வருகிறார். கங்குவா மோசமான தோல்வி அடைந்தது. அடுத்ததாக ரெட்ரோவும் பெரிய அளவில் வசூலை கொடுக்கவில்லை.

இப்போது ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகும் படத்தில் சூர்யா நடித்து வருகிறார். இதற்கு அடுத்தபடியாக வெங்கி அட்லூரி படத்தின் பூஜையும் சமீபத்தில் போடப்பட்டது. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக மமீதா பைஜூ நடிக்கிறார்.

ஆனால் சூர்யா நம்பி இருந்த இரண்டு இயக்குனர்களும் அடுத்தடுத்து கைவிட்டது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது வெற்றிமாறன் மற்றும் சூர்யா கூட்டணியில் வாடிவாசல் படம் உருவாக இருந்தது. ஆனால் வெற்றிமாறன் இப்போது வேறு ஹீரோக்களின் படங்களை எடுப்பதில் ஆர்வம் செலுத்தி வருகிறார்.

சூர்யாவை கைவிட்ட 2 இயக்குனர்கள்

அதாவது அடுத்ததாக சிம்புவின் படத்தை இயக்க உள்ளார். இதற்கு அடுத்தபடியாக தனுஷின் வடசென்னை 2 படம் உருவாக இருக்கிறது. ஆகையால் வாடிவாசல் படம் கைவிடப்பட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது. மற்றொரு படம் லோகேஷின் இரும்புகை மாயாவி.

இந்த படமும் பல வருடங்களுக்கு முன்பே ஒப்பந்தமான நிலையில் சில காரணங்களினால் படப்பிடிப்பு நடத்தாமல் இருந்தது. எப்படியும் இந்த படம் கண்டிப்பாக தொடங்கும் என ரசிகர்கள் காத்திருந்தனர். ஆனால் அந்த கதையில் இப்போது அமீர் கானை வைத்து லோகேஷ் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

இவ்வாறு சூர்யா நம்பி இருந்த வெற்றிமாறன் மற்றும் லோகேஷ் இருவருமே அவரை கைவிட்டுவிட்டனர். இதற்கெல்லாம் காரணம் சூர்யா தொடர் தோல்வி கொடுத்து வருவதால் அவரது மார்க்கெட் காலியாகிவிடும் என்பதுதான் என்று கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. ஆனால் கண்டிப்பாக அடுத்த படத்தில் சூர்யா கம்பேக் கொடுப்பார் என அவரது ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.