ரஜினி நூற்றுக்கும் மேற்பட்ட படங்கள் நடித்திருந்தாலும் அவர் மனதுக்கு நெருக்கமான படம் என்று ஸ்ரீ ராகவேந்திரா திரைப்படத்தை எல்லா மேடைகளிலும் கூறுவார். அதேபோல் சூப்பர் ஸ்டார் திரைக்கதை எழுதிய படங்களும் உண்டு. அவர் தன்னுடைய இத்தனை வருட சினிமா வாழ்க்கையில் மொத்தம் இரண்டு படங்களுக்கு திரைக்கதை எழுதியுள்ளார்.
அந்த இரண்டில் ஒரு படம் சூப்பர் ஸ்டாரின் சினிமா வாழ்க்கையையே சோலி முடித்திருக்கும். ரஜினி நினைத்தால் தமிழ்நாட்டின் அரசியலே மாறிவிடும் என்றிருந்த நிலையில் அவரை சுற்றிய அரசியல் அவருடைய மாஸ் ஹீரோ என்னும் பிம்பத்தை உடைத்தது. அதிலிருந்து ரஜினி படம் எடுக்கும் முயற்சியையே கை விட்டுவிட்டார்.
Also Read : 23 வருடங்கள் கழித்து ரஜினியுடன் இணையும் நடிகை.. சீக்ரெட்டாக வெளிவந்த ஜெயிலர் அப்டேட்
வள்ளி: 1993 ஆண்டு வெளியான வள்ளி திரைப்படத்தில் ஹரிராஜ்,பிரியராமன், வடிவேலு நடித்துள்ளனர். இந்த படத்தில் ரஜினி கௌரவ தோற்றத்தில் நடித்திருப்பார். இந்த படத்திற்கான கதை, திரைக்கதையை எழுதியது ரஜினி தான். இசைஞானி இளையராஜா இந்த படத்திற்கான பாடலையும், பின்னணி இசையையும் இசையமைத்து இருப்பார். இந்த படத்தில் வரும் ‘என்னுள்ளே என்னுள்ளே’ பாடல் தமிழ் சினிமாவின் முக்கிய பாடல்களில் ஒன்றாகும். இந்த படம் தெலுங்கில் ‘விஜயா’ என்ற பெயரில் வெளியானது.
இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சி தான் ரஜினிக்கு முதலில் தோன்றியதாம். கற்பழித்தவனையே ஒரு பெண் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற சமுதாய கட்டுப்பாட்டை மாற்றி அந்த பெண் தன்னை கற்பழித்தவனை கொலை செய்கிறாள். இந்த மைய புள்ளியிலிருந்து தோன்றிய கதையை ரஜினி ஏழு நாட்களில் எழுதி முடித்திருக்கிறார். இந்த படம் வணிக ரீதியாக பெரிய வெற்றியை ஈட்டவில்லை. இருந்தாலும் படம் 16 வயதினிலே கதையின் சாயலை கொண்டிருப்பதாக அன்றைய விமர்சனங்கள் எழுந்தன.
Also Read : உலக அழகி வேண்டாம் பாகுபலி நடிகை நீங்க வாங்க.. ஜெயிலர் படத்தில் நடந்த ட்விஸ்ட்
பாபா: 2002 ஆம் ஆண்டு ரஜினியின் கதை, திரைக்கதை, சொந்த தயாரிப்பில் வெளியான படம் பாபா. இந்த படம் ரஜினியின் கேரியரையே அசைத்து பார்த்துவிட்டது என்று சொல்லலாம். பாட்ஷா, அருணாச்சலம், படையப்பா என்று அடுத்தடுத்து ஹிட் கொடுத்த சூப்பர் ஸ்டார் ரஜினியின் சினிமா வாழ்க்கையே பாபா படத்தினால் மிகப்பெரிய கேள்விக்குறி ஆனது. சந்திரமுகி திரைப்படம் மட்டும் அடுத்து வரவில்லை என்றால் சூப்பர்ஸ்டாரின் சினிமா வாழ்க்கை என்னவாகி இருக்கும் என்று தெரியாது.
அரசியல், ஆன்மீகம் என ரஜினி மீது இருந்த அத்தனை கலவையையும் ஒரே படத்தில் காட்ட நினைத்து தோற்று போய் விட்டார்கள் என்றே சொல்லலாம். ரஜினி, நம்பியார் , கவுண்டமணி, மனிஷா கொய்ராலா என நட்சத்திர பட்டாளங்கள் இருந்தும், AR ரஹ்மான் இசை அமைத்தும் இந்த படம் பிளாப் ஆகியது. இந்த படத்தின் தோல்விக்கு பின்னால் ஒரு முக்கியமான அரசியல் கட்சியும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
Also Read : சிவகார்த்திகேயனை தவிர்த்த நெல்சன்.. ஜெயிலர் படத்தில் மிரட்ட வரும் நடிகர்