திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

பகிங்கரமாக மன்னிப்பு கேட்ட 2 ஹீரோக்கள்.. ஜெய் சும்மா இருந்தாலும் வாய் சும்மா இருக்காது

Actor Jay: சில பேருக்கு வாயால தான் ஏழரை நாட்டு சனி ஆரம்பிக்கும் என்று சொல்வார்கள். அது நடிகர் ஜெய் விஷயத்திலும் நடந்திருக்கிறது. அதாவது தான் சும்மா இருந்தாலும் வாய் சும்மா இருக்காது என்று சொல்வார்கள். ஜெய் ஒரு நேரத்தில் ரொம்பவே பீக்கில் படங்களில் கலக்கிக் கொண்டு இருந்தார்.

அப்போது ஓவர் தலைகனத்துடன் பந்தாவாக சுற்றித்திரிந்தார். என்ன பேசுகிறோம் ஏது பேசுகிறோம் என்று புரியாமல் ஜெயித்து வருகிறோம் என்ற திமிரில் பலரிடம் தேவையில்லாத வார்த்தைகளை கொட்டி இருக்கிறார். அப்படித்தான் இவர் அளித்த ஒரு பேட்டியில் வாயை வச்சுகிட்டு சும்மா இல்லாமல் உளறி இருக்கிறார்.

Also read: 5 படங்களை தவற விட்டு கதறி அழும் ஜெய்.. ஒரு படம் நடித்திருந்தால் கூட கேரியரை காப்பாற்றி இருக்கலாம்

அதாவது தற்போது நான்கு படத்தில் நடித்திருக்கிறேன். அதில் ஒரு படம் மட்டும் தான் ஓடும். மற்றவை எல்லாம் குப்பை படம் கண்டிப்பாக ஓடாது என்று கூறியிருக்கிறார். உடனே இவர் பேசியதை கேட்டதும் பணத்தை போட்ட தயாரிப்பாளர்கள் சும்மாவா விடுவாங்க.

உடனே இவரை வச்சு பார்க்கல, இவர் மீது கேஸ் கொடுத்து விட்டார்கள். அதன் பின் படாத பாடு பட்டு ஒரு வழியாக தயாரிப்பாளர்களை சாந்த படுத்த வேண்டும் என்பதற்காக சங்கத்தில் அனைவரது முன்னாடியும் பகிங்கரமாக மன்னிப்பை கேட்டுக் கொண்டார். அதன் பின் இவருடைய கேரக்டரை தெரிந்ததும் பல தயாரிப்பாளர்கள் இவரை வைத்து படம் பண்ணுவதாக இனி இல்லை என்று முடிவு கட்டி விட்டார்கள்.

Also read: மார்க்கெட் போனாலும் பரவாயில்லைனு ஜெய் நடிச்ச 5 தோல்வி படங்கள்.. இப்ப புலம்பி என்ன பிரயோஜனம்

அதிலிருந்து இப்போது வரை மீள முடியாமல் தவியாய் தவித்துக் கொண்டு வருகிறார் ஜெய். இவர் தான் இப்படி என்றால் நடிகர் மாதவனும் தேவையில்லாமல் ஒரு சர்ச்சையில் சிக்கிவிட்டார். அதாவது இவரை பொறுத்தவரை தப்பு என்றால் வெளிப்படையாக சொல்லக் கூடியவர். அப்படிப்பட்ட இவர் ஒரு தயாரிப்பாளரை ரொம்ப அசிங்கமாக கடுமையான வார்த்தைகளால் தாக்கி பேசி இருக்கிறார்.

அதன் பின் அந்த தயாரிப்பாளர் இவரிடமிருந்து இவ்வளோ பேச்சுக்கள் நான் ஏன் வாங்க வேண்டும் என்ற கோபத்தில் சங்கத்தில் புகார் அளித்து விட்டார். அதன்பின் மாதவன் நான் பேசியது தவறுதான் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் என்று மன்னிப்பு கேட்ட பின்பே இந்த விஷயம் சுமுகமாக முடிந்தது. இப்படி இந்த இரண்டு நடிகர்களும் தேவையில்லாமல் வார்த்தைகளை விட்டதால் மன்னிப்பு கேட்கும் படி ஆகிவிட்டது.

Also read: மாதவனை காலி செய்ய அப்பா இயக்குனர் செய்த மட்டமான வேலை.. உஷராக தப்பித்துக் கொண்ட சாக்லேட் பாய்

Trending News