சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

பாக்கியலட்சுமி முடிவுக்கு வந்ததால் சன் டிவி புது சீரியலுக்கு தாவிய 2 கதாநாயகிகள்.. துவண்டு போன விஜய்டிவி

Sun Tv New Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், கோபியிடம் இனியா பேசிய ஒவ்வொரு வார்த்தையையும் நினைத்து பார்த்து குற்ற உணர்ச்சியால் வருந்த ஆரம்பித்து விட்டார். அந்த வகையில் கோபிக்கு ஹார்ட் அட்டாக் வந்து ஹாஸ்பிடலில் சேர்க்கப்பட்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில் ராதிகா அவருடைய மன கஷ்டத்தை சொல்லும் விதமாக பாக்யாவிடம் ஆறுதல் தேடுகிறார்.

பாக்யாவும், ராதிகாவின் நட்பு ரீதியான பழக்கத்தை மேம்படுத்தும் விதமாக அட்வைஸ் கொடுத்து கோபிக்கும் ராதிகாவுக்கும் நல்ல புரிதலை ஏற்படுத்தி வாழ்வில் ஒன்று சேர்க்க வழி வகுக்க போகிறார். அந்த வகையில் பாக்கியலட்சுமி சீரியல் இன்னும் சில தினங்களில் முடிவுக்கு வரப் போகிறது. ஆனால் அதற்குள் அடுத்த வாய்ப்புகளை தேடும் விதமாக பாக்கியலட்சுமி சீரியலில் நடித்த இரண்டு கதாநாயகிகள் சன் டிவி புது சீரியலுக்கு தாவி விட்டார்கள்.

ஈஸ்வரி என்ற கதாபாத்திரத்தை யூகிக்க முடியாத அளவிற்கு அவ்வப்போது கேரக்டரை மாற்றி நடித்துக் கொண்டு வரும் பாக்யாவின் மாமியார், மகனுக்காக மருமகளை தவறு சொல்லும் கேரக்டரில் நடித்து வந்தார். அப்படிப்பட்ட இவருக்கு தற்போது சன் டிவியில் புதுசாக வரவிருக்கும் அன்னம் சீரியலில் அன்னத்தின் அத்தையாக நடிக்க கமிட் ஆகியிருக்கிறார்.

அதே மாதிரி பாக்யாவின் மருமகளாக நடித்து வரும் ஜெனி என்கிற திவ்ய கணேஷ் அன்னம் சீரியலில் கதாநாயகனுக்கு ஜோடியாக முக்கியமான கதாபாத்திரத்தில் கமிட் ஆகியிருக்கிறார். இவர் ஏற்கனவே சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சுமங்கலி சீரியலில் ஹீரோயின் ஆக நடித்திருந்தார். அதன் பிறகு விஜய் டிவி சீரியலில் செல்லம்மா, மகாநதி மற்றும் பாக்கியலட்சுமி சீரியல்களில் நடித்தார்.

தற்போது பாக்கியலட்சுமி சீரியலுக்கு அடுத்தபடியாக விஜய் டிவியில் எந்த சீரியலும் இல்லாததால் சன் டிவி சீரியலுக்கு மறுபடியும் தாவி விட்டார். ஏற்கனவே பாக்கியலட்சுமி சீரியலால் துவண்டு போய் இருக்கும் விஜய் டிவி அடுத்து புது அத்தியாயத்தை தொடங்கும் விதமாக பாக்கியலட்சுமிக்கு பதிலாக புத்தம் புது சீரியலை கொண்டு வரப்போகிறது.

Trending News